search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்துகள்"

    • காலை 8 மணியில் இருந்து இயங்குவதால் வாகனஓட்டிகள் பாதிப்பு
    • இரவு நேரத்தில் புறப்பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகள் அதிவேகத்தில் பறப்பதால் பாதசாரிகள் அவதி

    குனியமுத்தூர்,

    கோவையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி விபத்துக்களும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து சாலைக ளில் அன்றாடம் பயணி க்கும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு போக்கு வரத்து சிக்னல்கள் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் இல்லையென்றாலும் கூட வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, சாலைகளை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து சிக்னல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

    கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் காலை 8 மணியில் இருந்துதான் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரை ரோட்டில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருசில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே சிறு சிறு விபத்துகளும் அரங்கேறி வருகிறது.

    கோவையில் வியாபாரிகள் காலைநேரத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையில் காய்கறி வாங்கி வீடு திரும்பும் வாகனங்களையும் பார்க்க முடி கிறது.

    அதிகாலையில் டியூசன் செல்லும் மாணவ மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து சாலையில் அதிகாலை நேரத்தில் கார்கள், பஸ்கள் மற்றும் நடைப்பயிற்சி செல்வோரையும் ஒரே நேரத்தில் அதிகமாக பார்க்க முடிகிறது.

    கோவையில் அதிகாலை நேரத்தில் சிக்னல்கள் இயங்காததால் அனைத்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு சாலையை கடக்க முற்படுகின்றன. இதனால் பல்வேறு பகுதியில் சிறு-சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் தினந்தோறும் இரவு நேரங்களில் புறப் பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகளும் அத்துமீறிய வேகத்தில் செல்கின்றன. அத்தகைய நேரத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    சென்னையில் காலை 6 மணி முதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. எனவே சென்னையை போல கோவையிலும் அதிகாலை 6 மணிக்கு சிக்னல் இயக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலைகளில் சிறு சிறு விபத்துகளையும் தடுக்க முடியும்.

    போக்குவரத்து நெரிசலும் கட்டுப்படும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தி வருகின்றனர்
    • திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

    சூலூர்,

    சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் உள்ள திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையை இரண்டாக பிரிக்க நடுவில் தடை கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை கற்களுக்கு அருகே எந்தவித எச்சரிக்கை பலகையும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் அந்த வழியே வந்த கார் ஒன்று மற்றொரு காரை முந்தியபோது இந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இன்ப துரைராஜ் என்பவருக்கும் அவருடன் வந்த மற்றொருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல மேலும் ஒரு கார் ஒன்று நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இப்பகுதியில் குறுகிய காலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதே இடத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. நெடுஞ்சாலை துறையினர் சாலை தடுப்பு அருகே போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் அல்லது பால வேலை நடைபெறும் இடம் வரை சாலை தடுப்பு கற்களை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் சாலையின் மத்தியில் சாலை தடுப்பு கற்களை முழுவதுமாக வைத்தனர். மேலும் அதன் மீது ஒளிரும் பட்டைகளையும் ஒட்டினர்.

    • தந்தை - மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.
    • விபத்துகள் தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமாரி:

    புதுக்கடையை அடுத்த கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 59). இவர் சம்பவ தினம் தனது மகன் அபிசின் (21) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து புதுக்கடை - வெட்டு மணி சாலையில் சென்று கொண்டிருந்தார். காப்புக் காடு பகுதியில் செல்லும் போது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைககிள் மீது மோதியது. இதில் தந்தை - மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர்.

    மேலும் தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஞான முத்து மனைவி தங்கபாய் (64). இவர் நேற்று தனது வீட்டருகே சாலையோரத்தில் புல்அறுத்துக் கொண்டி ருந்தார். அப்போது சாலை யில் அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் ஒன்று தங்கபாய் மீது மோதியது. இதில் அவர் படுகாய மடைந்தார்.. வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடி யுள்ளார். படுகாயமடைந்த தங்க பாய் காஞ்சிர கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார்.

    இது போன்று தேங்கா பட்டணம் பகுதி பாலத்தடி என்ற இடத்தை சேர்ந்த லாரன்ஸ் (63) என்பவர் நேற்று காலையில் தனது மகன் தினேஷ் (28) என்பவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்காடு பகுதியை சேர்ந்த அஜீத் என்பவர் ஓட்டி வந்த பைக் தினேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிர கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமத்க்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்துகள் தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பி எடுக்கின்றனர். இதனாலும் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
    • மலைப்பாதையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதையில் இந்த மாதம் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

    மலைப்பாதையில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் விபத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.

    விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா கூறியதாவது:-

    மலைப்பாதையில் வாகனங்கள் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், விபத்துக்கள் நடக்கின்றன.

    மேலும் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவதும், வாகனங்களை வேகமாக ஓட்டுவதும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன.

    மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பி எடுக்கின்றனர். இதனாலும் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மலைப்பாதை பற்றி தெரிந்த டிரைவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும்.

    மலைப்பாதையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படும். விதிகளை மீறினால், அந்த வாகனங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 75,871 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32,859 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் தனியார் நிறுவன மேலாளர்- மூதாட்டி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • சிவகாசி டவுன், திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு வந்த துரைப்பாண்டி மதியம் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ரெயில்வே பீடர் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த துரைப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சம்பவத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார். கிருஷ்ணன் கோவிலில் உள்ள கண் ஆஸ்பத்திரி முன்பு பாண்டியம்மாள் நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஸ்ரீகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
    • முதற்கட்டமாக சாலையில் மண் நிரவும் பணியும், மண் பரிசோதனையும் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.56 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலையில் உள்ள இருவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் சாலைபாதுகாப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள இருவழிச்சாலையில் சாலை விபத்து அதிகமாக ஏற்படுவது கண்டறியப்பட்டன.இந்த விபத்துகளை குறைக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை முதல் தலைவாசல் தேசிய சாலை போக்குவரத்து ஆணையம் மூலம் சுமார் ரூ.2.21 லட்சம் செலவில் சாலையின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒன்று வீதம் 3 கி.மீ. தூரத்திற்கு 170 போலாட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும், முற்றிலுமாக அவ்விடங்களில் விபத்துகள் ஏற்படா வண்ணம் தடுத்திட, கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை இருவழிச்சாலை பகுதிகளை 4வழிச்சாலையாக மாற்றித் தருமாறு மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.56 கோடி மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை முதற்கட்டமாக இருவழிச்சாலையினை 4 வழிச்சாலையாக மாற்றிடவும், இப்பணியினை டிசம்பர் 2022-க்குள் முடித்திடவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணியில் முதற்கட்டமாக சாலையில் மண் நிரவும் 

    ×