search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle"

    • அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
    • பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் பழமையான பூனைகுத்தி காட்டாற்று பாலம் உள்ளது. மழை காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    இதனால் அங்கு உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து அங்கு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

    அந்த மாற்றுப்பாதை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த மாற்றுப்பாதை ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, உடனடியாக அந்த பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 2-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.

    இதன் எதிரொலியாக தற்போது அந்த பழுதடைந்த சாலையில் தார்சாலை போடப்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் தார்சாலை அமைத்து தந்த அதிகாரிகளை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாய் பாராட்டினர்.

    • சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வாகனம் மோதி விட்டது.
    • சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடி குமுளை அருகே பைபாஸ் சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது.

    சேலம்:

    தமிழ்நாடு தீயணைப்புத்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன வாகனங்கள், கருவிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தீயணைப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிநவீன கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியையும், மீட்பு குழுவினருக்கு தொடர் பயிற்சிகள் அளிப்பதையும் அதிகாரிகள் மேற்ெகாண்டுள்ளனர்.

    2 நவீன வாகனங்கள்

    அந்த வகையில், சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது. வழக்க மாக உள்ள தீயணைப்பு வாகனங்கள் 4,500 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய தாக உள்ளது.

    அதனுடன் இந்த வாக னங்களை சேர்த்துள்ளதால் பெரிய அளவில் பற்றி எரியும் தீயை வேகமாக கட்டுப்படுத்த இயலும். இந்த புதிய வாகனத்தில் ஒளிரும் விளக்குகள் உள்ளன. இரவு நேரத்தில் தீயணைப்பு வாகனம் விரைந்து செல்ல ஏதுவாக வடிவமைத்துள்ளனர்.

    தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்காக 100 அடி தூரத்திற்கு குழாய் இருக்கி றது. இவ்வகை வாகனத்தை இயக்கி தீயை கட்டுப்படுத்து வது மிக எளிது. அதனால், இந்த வாகனத்தை பயன்ப டுத்த தீயணைப்பு வீரர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    • எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
    • வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் கௌதம் (25) என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வருகின்றார். கௌதம் நேற்று இரவு முத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள்கௌதமை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பார்த்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு, பெட்ரோல் பங்க் அருகே சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கதினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இறந்தவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால் துணை போலீஸ் சூப்பிரண்டு, வேட்டைகாரனிருப்பு போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றனர்.

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • 265 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
    • மொத்தம் 3 இடங்களிலும் 710 பள்ளி வானங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    தஞ்சை வட்டார போக்கு வரத்து அலுவலக த்திற்குட்பட்ட இடங்களை சேர்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் 265 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் ஒவ்வொரு பள்ளி வாகனங்க ளிலும் ஏறிச்சென்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? அவசரகால வழி கதவு உள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? தீயணைப்பான் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் இன்று தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாக னங்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 3 இடங்களிலும் 710 பள்ளி வானங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதில் சிறுசிறு குறைகள் வாகனத்தில் கண்டறிய ப்பட்டாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்த பிறகே இயக்க அனுமதி க்கப்படும். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்.

    டிரைவர்கள் மிகவும் கவனமுடன் பஸ்கள் இயக்க வேண்டும். மாணவர்கள் பத்திரமாக பஸ்களில் ஏறி, பத்திரமாக இறங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? சரியான முறையில் இயங்குகிறதா என பரிசோதிப்பது எப்படி ? என்பது குறித்து டிரைவர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தெய்வபாலன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தாசில்தார் சக்திவேல்,

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலாதங்கத்தாய், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாடியம்மன்கோவில் சாலை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது58), இவரது மனைவி ஜெயலட்சுமி (43), கூலி தொழிலாளர்கள்.

    இந்நிலை யில், நேற்று சேதுபாவா சத்திரத்தில் இருந்து கட்டுமாவடி நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா சந்திப்பு பகுதியில் கோபால், ஜெயலட்சுமி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கழிவு செய்யப்பட்ட அரசு வாகனம் ஏலம் விடப்பட உள்ளது.
    • விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலக வாகன எண்.TN01G0660 கழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வருகிற 19-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல கட்டிட வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. டேவனித் தொகை ரூ.3 ஆயிரம் செலுத்திய பின்பே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தை மாற்றம் செய்யவோ ரத்து செய்யவோ ஏலக்குழுத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஏலம் எடுப்பவர் ஏலம் முடிந்த உடன் முழு தொகையை அன்றே செலுத்த வேண்டும். ஏலத் தொகைக்குரிய ஜி.எஸ்.டி. 18 சதவீதம் செலுத்தப்பட வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து 50 வாகனங்களில் 1500 பேர் பயணம் செய்தனர்.
    • மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் நான் (மைக்கேல்ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நலத்திட்ட உதவி களை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் 50 வாகனங்களில் 1500-க்கும் மேற்பட்டோர் இன்று மாலை மாநாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே‌ நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×