search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle"

    • புதிய குப்பை அள்ளும் வாகனங்களை தலைவர் தொடங்கி வைத்தார்.
    • மக்கும்-மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் 27 வார்டுகளில் சேகரிக் கப்படும் குப்பைகள் வீடு வீடாக சென்று மக்கும் -மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது. அவை குப்பை கிடங்கில் கொட்டப் பட்டு வருகின்றன.

    இது தவிர தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், ெரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் குப்பைகளை சேகரிப்ப தற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு சேகரிக் கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக நவீன குப்பை அள்ளும் 3 வாகனங் கள் திருமங்கலம் நகராட்சி சார்பில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட் டன.

    இந்த வாகனங்களை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் நித்யா 3 புதிய வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்த னர்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், சுகா தார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தினர்.
    • மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை, திருப்பூரில் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் வாடகை வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சில தினங்களுக்கு முன்பு பல இடங்களில் சோதனை நடத்தினர்.மொத்தம் 462 வாகனங்களை சோதனையிட்டதில் 13 பள்ளி வாகனங்கள், 33 ஆட்டோக்கள், 17 மேக்ஸி கேப், 23 டாக்சிகள் என மொத்தம் 115 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆட்டோவில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எனில் 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர். 12 வயதுக்கு அதிகமாக குழந்தைகள் எனில் 3 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல மேக்ஸி கேப் வாகனத்தில் 12 வயதுக்கு கீழ் இருந்தால் 12 பேரும், 12 வயதுக்கு மேல் இருந்தால் 18 பேர் வரையும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.பள்ளி வாகனங்களை பொருத்த வரை இருக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையானது மாறும்.

    இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்களை ஏற்றி சென்றதற்காக 115 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.3.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.
    • ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஒரு கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்வழங்க வேண்டும் டி .கே .ஜி. நீலமேகம் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

    இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஒரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம் வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து இன்று தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, சரவணன் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், மண்டல குழு தலைவர் கலையரசன், பகுதி துணை செயலாளர் வினோத், வட்டக் கழக நிர்வாகிகள் செழியன், கிள்ளிவளவன் , ராஜேஷ், மகாலிங்கம், அரசு, சிவக்குமார், பாலாஜி, வினோத், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவா (வயது 56). கூலி தொழிலாளி.

    இவர் தினமும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு ரவுண்டா அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று டீ குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அதேபோல், இன்றும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து புறப்பட்டு கடையில் டீ குடித்துள்ளார். பின்னர், கடையில் இருந்து திரும்பி வரும் வழியில் செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தொழிலாளி மீது மோதிச்சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாலம் கட்டும் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை.
    • இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை- கீழத்தோட்டம் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பணிகள் நடைபெறுவதால் பாலம் கட்டும் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்கு சென்று சேகரிக்கின்றனர்.
    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலைய த்திற்கு செல்லும் சாலை உள்ளது.

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் எதிர்ப்புறம் மற்றும் பயணியர் விடுதி, சார் பதிவாளர் அலுவலகம் நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம், ரயில் நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    மேலும் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் தினந்தோறும் குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

    குவிந்து வரும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்குச் சென்று சேகரிக்கின்றனர்.

    இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்ப டும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

    இவ்வாறு சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படும் போது அதிக அளவில் புகை சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது
    • 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் நகரங்களில் குப்பை அகற்றுவது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலை நகராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் வாயிலாக வீடுகள் ,வணிகம் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பை சிறிய அளவிலான பேட்டரி வாகனங்கள் வாயிலாக பெரிய வாகனங்கள் மற்றும் நுண் உர குடில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஏற்கனவே நகராட்சியில் 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    அதிகாரிகள் கூறுகையில்,தற்போது 7வாகனங்கள் வந்துள்ளன. மேலும் 3 வாகனங்கள் வாங்க வேண்டி உள்ளது . விரைவில் தூய்மைப் பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றனர்.இந்த புதிய பேட்டரி வாகனங்களின் வருகையால் நகரின் குப்பை பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வெள்ளமாசி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா்(வயது32). இவரது வீட்டு முன் 2இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் திடீரென இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

    இதையடுத்து வீட்டிலிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை அவா் ஆய்வு செய்த போது, மூகமுடி அணிந்து வந்த மா்ம நபா் தீ வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நாகாச்சி கிராமத்தை சோ்ந்த ஹரீஸ் (25) வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • இளங்கோ மனைவி அருள்மதிக்கு 4 சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
    • நிவேதா முருகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் முன்னிலையில் அனைத்து துறையை சார்ந்த அதிகபட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவ பயனாளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.8 லட்சம் மானிய தொகையில் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி அருள்மதிக்கு வழங்கப்பட்டது.

    இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

    இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளியின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

    • அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
    • பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் பழமையான பூனைகுத்தி காட்டாற்று பாலம் உள்ளது. மழை காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    இதனால் அங்கு உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து அங்கு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

    அந்த மாற்றுப்பாதை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த மாற்றுப்பாதை ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, உடனடியாக அந்த பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 2-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.

    இதன் எதிரொலியாக தற்போது அந்த பழுதடைந்த சாலையில் தார்சாலை போடப்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் தார்சாலை அமைத்து தந்த அதிகாரிகளை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாய் பாராட்டினர்.

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மேட்டூர் காவிரி கிராஸ் அருகே கால்வாய் கரையில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரிக்கரை பகுதியில் உள்ள கால்வாய் கரையில் ஒரு மோட்டார்சைக்கிள் கிடந்தது. அது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

    அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர். 

    அதை தீவைத்து எரித்தவர்கள் யார்? அந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர் யார்? முன்விரோதத்தில் மோட்டார்சைக்கிளை  கடத்தி கொண்டு வந்து தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×