search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arson"

    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
    • பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    நேற்று இரவு இந்த நீர் மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதில் பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனியப்பன், தி.மு.க. நிர்வாகி ராமநாதன் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
    • கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

    இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
    • ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.

    பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.

    அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    • மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே தெற்குப்பாளையம் முத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி அருக்காணி (வயது 60). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினார். அதனை கடந்த 4 வருடமாக மாதந்தோறும் தவணையாக பணம் செலுத்தி வந்தார்.

    இ்ந்த நிலையில் இவருடைய கணவர் செல்வராஜ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அருக்காணி வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த அருக்காணியிடம் கடந்த 4 மாதமாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை பூட்டப்போவதாக தெரிவித்தனர்.

    இதனால் மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சமையல் செய்த 2 பெண்கள் உடலில் தீ பிடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 32). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டுக்கு வெளியே அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எஎண்ணெய் தனலட்சுமி அணிந்திருந்த நைட்டியில் விழுந்து எதிர் பாராத விதமாக தீப்பிடித்த தில் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று தன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மதுரை மாவட்டம் வில்லூர் போலீஸ் சரகம் எம். போத்த நதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி பாண்டித்தாய் (வயது 65). பிள்ளை களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வரு கின்றனர்.

    பாண்டித்தாய் தனியாக குடியிருந்து வருகிறார் பாண்டித்தாய் வீட்டில் கரண்ட் இல்லாததால் மண் எண்ணெய் விளக்கு வைத்து அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென மண்எண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்து தீப்பிடித்ததில் பாண்டி தாய்க்கு சேலையில் தீப் பிடித்து காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தி னர் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டித்தாய் உயிர் இழந்தார்.

    இச்சம்பவம் குறித்து மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி -மாமியார் மீது வழக்கு
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, மனைவி வாழ்ந்து வந்தார்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

    இவரது மனைவி உஷாராணி (37). தம்பதியினருக்கு பரத்குமார் (13) என்ற மகனும், காவியஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.

    சுரேஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷாராணி, கணவனை பிரிந்து கண்ண மங்கலம் அருகே உள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சுரேஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று, மனைவி உஷாராணியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உஷாராணி மற்றும் அவரது அவரது தாய் பூஷணம் ஆகிய 2 பேரும் சேர்ந்து,' நீ செத்தால் தான் எங்களுக்கு நிம்மதி' என கூறி, சுரேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.

    தீக்காயங்களுடன் அலறியபடி தெருவுக்கு வந்த சுரேஷை, அப்பகுதி மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்க ம்பாறை அரசு மருத்துவ மனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

    இதுகுறித்து சுரேஷ் தந்த வாக்கு மூலத்தின் பேரில் கண்ண மங்கலம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மகாலட்சுமி, உஷாராணி, பூசணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வந்திருந்தார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் வெளிநாட்டில் வேலை செய்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோயில் பெரியார் நகர் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சார்ந்த நபர் ஒருவர் அவரது வீட்டின் அருகே உள்ள பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அவரிடம் தெரிவித்த போது ஆட்கள் வைத்து மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும்,  பரபரப்பு ஏற்பட்டது.

    • காரியாபட்டி அருகே கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி பொக்லைன் எந்திரத்துக்கு தீவைக்கப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலகல்லங்குளம் கிராமத்தில் பிரதீப் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் சக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தமுருகன்(40) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஆனந்தமுருகன் பணம் தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து 4 பேர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று கல்கு வாரிக்கு வந்த அவர்கள் ஆனந்த முருகனிடம் தகராறு செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய தோடு அங்கு நிறுத்தியிருந்த 2 பொக்லைன் எந்திரத்துக்கு தீவைத்தனர். மேலும் ரூ.22 ஆயிரம் பணத்தையும் அபகரித்து கொண்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் சமூகவிரோதிகள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இதனால் வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

    தினமும் ரவுடிகளுக்கு கப்பம் கட்டும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
    • இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவக் கழிவு எரியூட்டும் நிலையத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்ரீ முன்னிலையில் சுமார் 577 கிலோ கஞ்சாவினை போலீசார் தீயிட்டு எரித்தனர்.

    இந்நிகழ்வின்போது டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், திருப்பூர் மாநகர துணை ஆணையர் ஆசைத்தம்பி, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×