கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு

கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது.தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடலூர் குழந்தை காலனி பகுதியில் போலீசார் விசாரணை செய்தபோது துணை மேயர் தாமரைச்செல்வன் சம்பவத்தை குறித்து போலீசாரிடம் பேசிய காட்சி.
கடலூர் குழந்தை காலனி பகுதியில் போலீசார் விசாரணை செய்தபோது துணை மேயர் தாமரைச்செல்வன் சம்பவத்தை குறித்து போலீசாரிடம் பேசிய காட்சி.
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கட்சி அலுவலகம் எரிந்து சாம்பலானது. அப்போது இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மர்ம நபர்கள் யார் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். 

தகவல் அறிந்த மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com