search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார்சாலை"

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக் கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்ப தற்கான பூமி பூஜை, முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப் பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார். அவைத் தலைவர் பாலசுப்ரமணி யன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக் குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா, ஈஸ்வரி, கோவிந்த ராஜ், சுமதி பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெய மணி, ஜெயமாலா, பால முருகன், நகர் செய லாளர்கள் ரகுபதி, மனோ கரவேல் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, யோகேஷ், தவ சதீஷ், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.98 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சுப்ரமணியாபுரம் முதல் தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர் குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவராணி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர்கள் குருசாமி, ராஜகோபால், கிரகதுரை, குருசாமி, கருப்பையா, உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 25 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேர்வை காரன் பட்டி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். 25 ஆண்டுகளாக சிங்கம்புணரி எஸ்.புதூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு வர சாலை மோசமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த அவர் பொதுநிதியில் ரூ.18.03 லட்சம் நிதி ஒதுக்கி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்.

    சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பொன் மணி பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை ெதாடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சிங்கம்பு ணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு, சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி தலைவர் பூங் கோதை கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சா லைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தார்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சில இடங்களில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு அருகே வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது.

    இதன் காரணமாக சிலர் தடுமாற்றத்துடன் விழுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.

    எனவே சாலையில் வேகத்தடை அமைக்கும் போதே வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    இல்லையென்றால் வேகத் தடுப்பில் அடிக்கும் வெள்ளை நிறத்திற்குப் பதில் வேகத்தடுப்பு கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம் என்று வாகன வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் எங்கெல்லாம் வேகத்தடைக்கு வர்ணம பூசாமல் உள்ளது என கண்டறிந்து அதறகு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • தொடக்க பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு, ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை, எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு , கணம் பள்ளிதெரு, மணியகாரன் கொட்டாய், உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனையடுத்து தொடக்க பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் கோபால் செட்டி தெருவில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது சாலை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் பழனி உடன் இருந்தார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் செல வில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்ட பணியின் தொடக்க விழா கொட்டாரம் மிஷியன் காம்பவுண்ட் பகுதியில் இன்று காலை நடந்தது.

    கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும், பேரூர் தி.மு.க. செயலாளருமான வைகுண்டபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வசந்தகுமாரி, இந்திரா, பேரூராட்சி பொறியாளர் கமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்புற சாவைகள் மேம்பாட்டுத் திட்டம் 2023 - 24 கீழ் ரூ.79.95 லட்சம் மதிப்பில் தென்தாமரைகுளம் முஸ்லீம் பள்ளிவாசல் முதல் விஜயநகரி ஜங்சன் வரை தார் சாலை அமைத்தல், மேலசந்தையடி

    சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் மனோ தங்க ராஜ் பணியை தொடங்கி வைத்தார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு, வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகாபிரதாப்,

    பேரூராட்சி உறுப்பி னர்கள் சவுந்தர்ரா ஜன், பூவியூர் காமராஜ். எட்வின் ராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் மற்றும் பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வா கிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவில் வாகனம் நிறுத்துமிடத்தின் சுற்றுச்சுவர் பழுதடைந்து காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா ( ஸ்டெம் பூங்கா ) அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்டெம் பூங்காவை வருகிற 27 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் வாகனம் நிறுத்தும் இடத்தின் சுற்று சுவர் பழுது அடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பூங்கா முன்பு அமைந்துள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

    எனவே பூங்கா திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அதற்குள் சுற்று சுவரை சீரமைத்து சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    பாலக்கோடு,  

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள முத்து கவுண்டர்தெருவில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு, ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு, கணம் பள்ளி தெரு, மணியகாரன் கொட்டாய் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பழனி, ஒப்பந்ததாரர் செந்தில்ரங்கநாதன், துணை தலைவர் தாஹசினா இதயத்துல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகரத்தினம், சரவணன், ரவி, மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், கிளை செயலாளர்கள் கணேசன், பெரியசாமி, சக்திவேல், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தெருவில் மாநகராட்சி சார்பில் புதியதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது.
    • இந்த நிலையில் இன்று சரியாக சுத்தம் செய்யாமல் தார்சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி ஒன்று திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ராஜராஜன் நகர் 1-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மாநகராட்சி சார்பில் புதியதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று சரியாக சுத்தம் செய்யாமல் தார்சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி ஒன்று திரண்டனர்.

    உடனடியாக இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், மாநகராட்சி சார்பில் வார்டு எண் 29 முதல் 41 வரையிலான 13 வார்டுகளில் 23 சாலைகள் ரூ.1.80 கோடி மதிப்பில் போடப்பட்டு வருகிறது.

    அதில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தார் சாலை போடுவதற்கு முன் குறைந்த அளவில் சுத்தம் செய்யப்பட்டது. எனவே முழுமையாக சுத்தம் செய்து தார் சாலை போடப்படும் என்று உறுதி அளித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி பேசுகையில், எனது வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. ரூ. 1 லட்சத்து 20 மதிப்பிலான வேலை நடந்து இருக்கிறது.

    அதற்கு பணம் இன்னும் தரவில்லை. மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டதை தவிர வேறு வேலை நடக்கவில்லை. 82-83 வார்டுகள் இணைப்பு பாதையில் மின்விளக்குகள் 6 மாதமாக எரியவில்லை என்றார்.

    85- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமார் பேசுகையில், எனது வார்டில் வணிகர் வளாகம் அமைக்க வேண்டும். பேவர் பிளாக் சாலை மேடு பள்ளமாக இருக்கிறது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும். மேலும் முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும். இதற்கு முன்பு எனது வார்டில் பணியாற்றிய உதவி பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    அவர்கள் நன்றாக பணியாற்றினார்கள். எனவே மீண்டும் அவர்களை எனது வார்டுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

    • ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்
    • ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

    மதுரை

    மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை- போடி ரெயில் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. பணியின் போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட்களை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே மூடியது.

    இதை தொடர்ந்து மதுரை- போடி ரெயில்வே பாதைக்கு அருகே இருந்த பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே கிராசிங்கை கடக்கும் சூழல் உருவானது.

    சில இடங்களில் ரெயில்வே நிர்வாகத்தால் 500மீட்டர் தூரம் வரை மட்டுமே சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.

    மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.

    இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

    ×