கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
தார்சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.
தார்சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 15 எண்ணிக்கையிலான 1,2,5,7,10, மற்றும் 15,16, 19,22,32 ஆகிய வார்டுகளின் தெருக்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 5-வது வார்டு நகராட்சி உறுப்பினர் பால சுப்பிரமணியன் என்ற கண்ணன், இளைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com