கணபதிபாளையம் ஊராட்சியில் தார்சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்

மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி. 
சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி. 
Published on

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் கணபதிபாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.35 லட்சம் மதிப்பீட்டில் மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், நிர்மலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com