search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharsalai"

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
    • இரவு முழுவதும் எம்.எல்.ஏ. கண்காணித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி-வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தபணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று இரவு முழுவதும் அங்கிருந்து கண்காணித்தார். இதைத்தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வழக்கம் போல் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் வசந்த் (வயது 17).

    இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.‌

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

    பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் வயலூர் பகுதியில் சென்றபோது பஸ்சில் இருந்த மாணவன் வசந்த் திடீரென தவறி கீழே விழுந்தான்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை- கும்பகோணம் சாலையில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.

    உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    மேலும் பஸ் நிற்காமல் சென்றதை கண்டித்தும் கூறினர்.‌

    புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
    • ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது

    நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்

    தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

    இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது

    புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    ×