search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tharsala"

    • சிவகங்கை நகராட்சியில் ரூ.98 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஆய்வு செய்தார்.
    • பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியின் சார்பில் நகரின் மையப்பகு தியான அரண்மனை வாசலில் இருந்து வாரச் சந்தை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற தாக இருந்து வந்தது. அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். 2 மற்றும் 3-வது வார்டு சி.பி.காலனி உள்ளிட்ட பகுதி களில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சியில் நகர மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை நகராட்சியை ஒரு முன்மாதிரி நகராட்சி யாக உருவாக்கிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வின்போது சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், ஆணையா ளர் (பொறுப்பு) பாண்டீஸ் வரி, நகர இளைஞர் அணி அமைப்பாளரும், மன்ற உறுப்பினருமான அயூப் கான், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயகாந்தன், வீரக்காளை, நகர துணை செயலாளர்கள் வீனஸ் ராமநாதன், ஆறு.சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர் ராஜா அமுதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×