search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tharsalai"

    • தூத்துக்குடி 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன் நகர், மேற்கு 4, 5, 6 ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
    • அப்பணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியாக 2008-ல் தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஊராட்சி பகுதியாக இருந்து இணைக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இருந்து வந்தன. தி.மு.க. ஆட்சி அமைந்தபின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    அப்பகுதி மக்கள் வைக்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன் நகர், மேற்கு 4, 5, 6 ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • சோழன் சிலையை கோவில் உள்புறத்தில் வைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்குலத்தோர் சமுதாய மக்களை தேவரினமாக ஒரே பெயரில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் .

    தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலையை கோவில் உட்புற வளாகத்தில் வைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தார் சாலை போடுவது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு. சரவணதேவர் தலைமை தாங்கி பேசியதாவது :-

    4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெரிய கோவில் கட்டிய மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலையை கோவில் உள்புறத்தில் வைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் செந்தில் தேவர், தஞ்சை நகர செயலாளர் ராமு தேவர், இளைஞரணி செயலாளர் சக்தி, நாகை மாவட்ட செயலாளர் பைரவர் தேவர், தஞ்சை மாவட்ட பொருளாளர் ரவீந்திர தேவர், பட்டுக்கோட்டை நகர துணை செயலாளர் சண்முகம், பேராவூரணி ஒன்றிய செயலாளர் தமிழ் தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் இளையராஜா தேவன் நன்றி கூறினார்.

    • மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்.
    • தேர்த்திருவிழாவின் போது பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி மலை கோவில். இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த கோவிலில் மூலவராக முத்துக்குமாரசாமி சன்னதியும் மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை, பாலகணபதி, நவகிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன.மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

    எனவே பழனி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம் .இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், போன்ற விழாக்களின் போது தேர் கிரிவலம் வருவது வழக்கம், இங்குள்ள கிரிவல சாலை ஆனது சுமார் 500 மீட்டர் தூரம் கொண்டது. இதற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேர்த்திருவிழாவின் போது பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். இந்த நிலையில் தேர் கிரிவல சாலை மண் சாலையாக இருப்பதால் பக்தர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே தமிழக அரசு முத்துக்குமாரசாமி மலைக்கோவிலுக்கு தார்சாலை அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×