search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganapathipalayam panchayat"

    • மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் கணபதிபாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.35 லட்சம் மதிப்பீட்டில் மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், நிர்மலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் ஆதிநாராயணன் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், குடிநீர் குழாயை திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இதில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் செய்து தர பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    • 11 வது வார்டு உறுப்பினர் நித்யா அவரது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி 11 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி 11 வது வார்டு உறுப்பினர் நித்யா அவரது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஊராட்சி செயலர் பிரபு, பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்களிடம் தனது வார்டில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்றவற்றிற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறினார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி 2021- 22 ஆம் வருடத்தில் 11-வது வார்டு பகுதியில், சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு பணிகள் நடைபெற்று உள்ளதாக கூறினார். இதையடுத்து தான் கோரிக்கை வைத்துள்ள பணிகளையும் நிறைவேற்ற வேண்டுமென நித்யா கூறியதை அடுத்து, 3 மாத காலத்தில், அந்தப் பணிகள் நிறைவேற்றித் தரப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் கூறியதையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், காத்திருப்பு போராட்டத்தின் போது அங்கு வந்த பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பூபாலன், மற்றும் நிர்வாகிகளுக்கும், அங்கிருந்த திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×