கணபதிபாளையம் ஊராட்சியில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி

ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 
குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் ஆதிநாராயணன் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், குடிநீர் குழாயை திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இதில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com