search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat chairman"

    • அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை.
    • தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு மகன் பாலாஜி (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக செயல்பட்டார். இவரது மனைவி உமாமகேஸ்வரி குஞ்சரம் ஊராட்சி தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து குஞ்சரத்திற்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாலாஜி வந்து கொண்டிருந்தார். அப்போது தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    அவ்வழியே சென்றவ ர்கள் இவரை மீட்டு எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ள க்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவரின் கணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொதுமக்களுக்கும் முக்கிய சாலை வழியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
    • இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பெற்றனர்.

    தூத்துக்குடி:

    உமரிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொதுமக்களுக்கும் முக்கிய சாலை வழியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவருமான டாக்டர் எஸ்.ராஜேஷ்குமார் தனது சொந்த நிதியில் வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உமரிக்காடு ஊர் தலைவர் கார்த்திசன், ஆலடியூர் ஊர் தலைவர்கள் ஜெயச்சந்திரன், சேகர் மற்றும் உமரிக்காடு ஊராட்சியின் 9 வார்டுகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். லாரிகள் மூலம் குடிநீரை ஒவ்வொரு தெருவாக, வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பெற்றனர். குடிநீர் விநியோகம் செய்த ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கூட்டம் அதன் தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமையில் நடை பெற்றது.
    • குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு அனுமதி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கூட்டம் அதன் தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ வரவேற்றார்.

    15-வது நிதிக்குழு திட்டம்

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் முள்ளக்காடு வக்கீல் செல்வகுமார், அருண்குமார், அழகேசன், ஞான குருசாமி, ஜெசி பொன் ராணி, தங்கமாரி யம்மாள் மற்றும் கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மூலம் இந்தஆண்டு 15-வது நிதிக்குழு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவை யான நடவடிக் கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தீர்மானங்கள்

    தொடர்ந்து குடிநீர் திட்டப்பணிகளில் பம் ரூம் அமைத்தல், ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், அடிபம்பு அமைத்தல், பம்ப்ரூம் கட்டுதல் போன்ற குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் பல்வேறு கிராம புறப் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு அனுமதி அளித்தல்,

    சுகாதார பணிகள் திட்டத்தில் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் நாப்கின் ஏரியூட்டிகள் தலா ரூ. 45 ஆயிரத்து 800 செலவில் 233 பள்ளிகளில் அமைப்பதற்கு ரூ. 1 கோடியே ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு ஒப்புதல் வழங்குதல்,

    குடிநீர், சாலை உள்ளிட்ட இதர பணி களுக்காக ரூ. 1 கோடியே 42 லட்சம் அனுமதி அளித்து, உடனடியாக பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் ரூ. 3 கோடியே 56 லட்சம் செலவில் பணிகள் மேற் கொள்ள தீர்மானி க்கப்ப ட்டது. இதேபோல் பல்வேறு செலவீன தீர்மா னங்கள் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    • திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிகண்ணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

    15-வது நிதிக்குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை சில கவுன்சிலர்கள் பணிகளை தேர்வு செய்து வழங்காமல் உள்ளனர். 60 நாட்களுக்குள் பணித்தேர்வு பட்டியலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பணித்தேர்வு பட்டியலை கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு நிறைவேற்றவும், விடுபட்ட பணித்தேர்வு பட்டியலை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றலாம் என்று விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பணித்தேர்வு பட்டியலை விரைந்து கொடுக்க மாவட்ட ஊராட்சி தலைவர் வலியுறுத்தினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட ரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சி தலைவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு தேவை யான குடிநீர், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு பகுதிக்கு முழுமையான அளவு குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து செல்கிறது. ஆனால் கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வ தில்லை.

    பொதுமக்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சி துறை ஒருங்கி ணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சி பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்பொழுது மேற்கொள்ள திட்டமிட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நிலவரப்படி ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதியில் எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது?, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்க ளுடன் ஒருங்கி ணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனைத்து ஊராட்சி மன்றத் தலை வர்களும் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதுடன் அவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின் பகிர்மான கழகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

    திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் தொகை அடிப்படை யில் 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கும் வகையில் செயல்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நீர்வள ஆதார திட்டத்துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் இளங்கோ வன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், திருப்புல்லாணி ஊராட்சி சேர்மன் புல்லாணி,பி.டி.ஓ.க்கள் கணேஷ்பாபு, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது.
    • ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது சிவசக்தி நகர். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இப்பகுதியில் தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபுவுக்கு உடனடியாக சாலை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் தலைவர் பிரபு கனிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
    • ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.

    இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.

    இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊருக்கு உழைக்கும் திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
    • கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி குருசந்திரசேகர் உள்ளார். இவர் ஊராட்சித் தலைவராக பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வருகிறார்.

    லட்சுமியும், அவரது கணவர் குரு சந்திரசேகரும் திண்டியூர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் இல்லத் திருமண நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை குடும்பங்களுக்கு திருமண சீர்வரிசையாக தங்கள் சொந்த செலவில் கட்டில், மெத்தை, தலகாணி உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.

    மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாளில் ஏழை மக்களுக்கு உதவுகின்ற வகையில் இலவசமாக வேஷ்டி,சேலை, இனிப்பு வழங்கியும் வருகின்றனர். இது தவிர இப்பகுதியில் அரசு நிர்ணயித்த தொகையில் தரமான வகையில் சாலை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். இதற்கு தங்களது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிட கட்ட அரசு அனுமதி வழங்கி அதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீடு செய்து வழங்கியது.

    இருந்த போதிலும் இந்த கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஊராட்சித் தலைவர் தனது சொந்த பணத்தில் ரூ.13 லட்சம் செலவு செய்து ஆக மொத்தம் 31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த கட்டிடத்தை நாளை 6-ந் தேதி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி திறந்து வைக்கிறார்.

    இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், சுந்தரசாமி, கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

    • தேனி அருகே ஊராட்சி மன்ற தலைவரை மர்ம கும்பல் ஆயுதத்தால் தாக்கியது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்றத் தலைவ ராக உள்ளவர் பிச்சை (வயது51). கேபிள் டி.வி. ஆப்ரேட்டராகவும் உள்ளார். நேற்றிரவு வீட்டில் இருந்து அரண்மனை புதூரில் உள்ள தனது கேபிள் டி.வி. அலுவலகத்திற்கு பைக்கில் பிச்சை சென்று கொண்டி ருந்தார். அப்போது அவரது பின்னால் மற்ெறாரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் காயத்துடன் மீண்டும் சென்றார்.

    சிறிது நேரத்தில் உடல் முழுவதும் ரத்த வெள்ள த்தில் இருந்த பிச்சையை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் கழுத்தில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் பிச்சை காயமடைந்திருப்பதை உறுதி செய்தனர்.‌ இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் அரண்மனைப்புதூர் பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×