என் மலர்
நீங்கள் தேடியது "Drinking Water Distribution"
- உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொதுமக்களுக்கும் முக்கிய சாலை வழியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
- இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பெற்றனர்.
தூத்துக்குடி:
உமரிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொதுமக்களுக்கும் முக்கிய சாலை வழியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவருமான டாக்டர் எஸ்.ராஜேஷ்குமார் தனது சொந்த நிதியில் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உமரிக்காடு ஊர் தலைவர் கார்த்திசன், ஆலடியூர் ஊர் தலைவர்கள் ஜெயச்சந்திரன், சேகர் மற்றும் உமரிக்காடு ஊராட்சியின் 9 வார்டுகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். லாரிகள் மூலம் குடிநீரை ஒவ்வொரு தெருவாக, வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பெற்றனர். குடிநீர் விநியோகம் செய்த ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






