அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற தலைவரை கழுத்து அறுத்து கொல்ல முயற்சி

தேனி அருகே ஊராட்சி மன்ற தலைவரை மர்ம கும்பல் ஆயுதத்தால் தாக்கியது.புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை.
ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை.
Published on

திண்டுக்கல்:

தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்றத் தலைவ ராக உள்ளவர் பிச்சை (வயது51). கேபிள் டி.வி. ஆப்ரேட்டராகவும் உள்ளார். நேற்றிரவு வீட்டில் இருந்து அரண்மனை புதூரில் உள்ள தனது கேபிள் டி.வி. அலுவலகத்திற்கு பைக்கில் பிச்சை சென்று கொண்டி ருந்தார். அப்போது அவரது பின்னால் மற்ெறாரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் காயத்துடன் மீண்டும் சென்றார்.

சிறிது நேரத்தில் உடல் முழுவதும் ரத்த வெள்ள த்தில் இருந்த பிச்சையை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் கழுத்தில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் பிச்சை காயமடைந்திருப்பதை உறுதி செய்தனர்.‌ இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் அரண்மனைப்புதூர் பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com