எலவனாசூர்கோட்டை சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தி.மு.க. பிரமுகர்: விபத்தில் பலியானாரா? என போலீசார் விசாரணை

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை. தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
பாலாஜி
பாலாஜி
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு மகன் பாலாஜி (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக செயல்பட்டார். இவரது மனைவி உமாமகேஸ்வரி குஞ்சரம் ஊராட்சி தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து குஞ்சரத்திற்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாலாஜி வந்து கொண்டிருந்தார். அப்போது தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அவ்வழியே சென்றவ ர்கள் இவரை மீட்டு எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ள க்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவரின் கணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com