search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pavurchathiram"

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
    • மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஆரியங்காவூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 33) மற்றும் வடக்கு பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த தாசன்(44) ஆகிய 2 பேரிடமும் சோதனை செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதில் இருந்த 27 கிலோ குட்கா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன
    • போட்டிகள் பொதுப்பிரிவு, 15,11 வயது பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.போட்டிகள் பொதுப்பிரிவு, 15,11 வயது பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. சதுரங்க கழக செயலர் வைகைகுமார் முன்னிலையில், தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக ராஜகாந்தன், அருண்குமார், வைதேகி ஆகியோர் செயல்பட்டனர்.

    15வயது மாணவர்கள் பிரிவில் தென்காசி ஆர்.சி. வீரமாமுனிவர் பள்ளி மாணவன் சுபாஷ், மாணவியர் பிரிவில் கடையம் அரசு பள்ளி மாணவி அக்ஷயா, 11வயது பிரிவில் செங்கோட்டை அரசு பள்ளி மாணவன் ஜெனோவின், மாணவிகள் பிரிவில் கல்லூரணி தேவி பள்ளி மாணவி பிரபாஷினி ஆகியோர் மாவட்ட பொதிகை சாம்பியன்களாக வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும் பொதிகை சதுரங்க கோப்பை மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேலும் பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி, புதிய வீரர்கள் பிரிவில் சுரண்டை அரசு பள்ளி மாணவன் கேசவன் முதலிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. 8 வயதுக்குட்பட்ட 14 வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பால கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் மணிவண்ணன், சதுரங்க ஆர்வலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆவுடையானூர் அருகே உள்ள சின்னகுமார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரது மகன் ஆனந்த செல்வம் (வயது 24) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்த செல்வத்தை கைது செய்தனர். 

    • பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
    • பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் சுமார் 28,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவாக பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதற்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனருமான கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கி கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார், தமிழ்நாடு கோ கோ கழக செயலாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆவுடையனூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் நன்றியுரை ஆற்றினார். பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் சுமார் 28,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாத ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்
    • பயணச்சீட்டு வழங்குமிடம், ஊழியர்கள் அறை, பயணிகளுக்கு இருக்கை வசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாத ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.பயணச்சீட்டு வழங்குமிடம், ஊழியர்கள் அறை, பயணிகளுக்கு இருக்கை வசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் கே.ஆர்.பி.இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பாவூர்சத்திரம் வழியாக செல்லும் பாலருவி விரைவு ரெயிலை பாவூர்சத்திரத்தில் நின்று செல்லவும், நெல்லை தாம்பரம் சிறப்பு ரெயில், நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் ஆகியவற்றை நிரந்தரமாக இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கைமனு அளித்தனர்.

    அதற்கு மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் செயலாளர் முருகன், பொருளாளர் பரமசிவன் மற்றும் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம், உறுப்பினர்கள் அருணாசல முத்துச்சாமி மற்றும் மாவட்ட தலைவர் திருமலை கொழுந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.




    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதி கிராமங்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
    • காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடையானூர், அரியப்பபுரம், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர், கல்லூரணி, சிவ நாடானூர்,இடையர் தவணை உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோன்று அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளாக சேர்க்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் மட்டுமின்றி வாந்தி இருமல் போன்ற அறிகுறிகளும் உள்ளன. அதிகம் சோர்வடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர். எனவே குழந்தைகளை வேகமாக தாக்கி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் சார்பில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளி மாணவிகள் 369 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ. பழனி நாடார், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவிகள் 369 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, ஒன்றிய செயலாளர் சீனித்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    • தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
    • கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, ரோஜா பூ, கேந்தி பூ உள்ளிட்ட பூக்கள் இந்த சந்தைகளுக்கு விற்பனைக்காக விவசாயி கள் கொண்டு வருவார்கள்.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை இல்லாததால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் மற்றும் கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1100-க்கும். கேந்தி பூ கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனை ஆகிறது.

    வரக்கூடிய நாட்களில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரி விக்கின்றனர் இதனால் இப்பகுதியில் உள்ள பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தென்காசி-நெல்லை நான்கு வழிச் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாடசாமி,வேலு, மாதவன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.தென்காசி மாவட்ட செயலாளர் அய்யப்பன் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஷேக்மைதீன், முத்துசாமி, சுப்பிரமணியன், குருசாமி, பிச்சுமணி, செல்வமணி ஆகியோர் பேசினர். ஏ.ஐ.சி.டி.யு மாநில தலைவர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் அரிபாலகிருஷ்ணன், அண்ணாதுரை,ராமசாமி, பாலசுப்பிர மணியன்,நடராஜகுமார், கருப்பையா, அரிச்சந்திரன் ,சிவசக்தி, முப்புடாதிமுத்து, இசக்கிமுத்து, கோவிந்தராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள், பெண்கள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாரியப்பன் நன்றி கூறினார்.


    • தென்காசி மாவட்டத்தில் ரெயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ெரயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ெரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    இது குறித்து பயணிகள் பாவூர்சத்திரம் பெயர் பலகையில் இருக்கும் பிழையை திருத்தி எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று தென்னக ெரயில்வே சார்பில் ஆங்கிலத்தில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டது. இதற்கு பாவூர்சத்திரம் பகுதி ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
    • பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நெல்லை -தென்காசி இடையே இடைப்பட்ட பகுதியில் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வரும் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையங்களின் முகப்பு பகுதியில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்த இரு முகப்பு ஆர்ச்களும் இடித்து அகற்றப்பட்ட நிலையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக இரவில் ஆர்ச் இடித்து அகற்றப்பட்ட தாக சாலை ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ராயப்பநாடானூர் மேல தெருவை சேர்ந்தவர் ராஜ கண்ணன். இவரது மனைவி தாழம்பூ. இவர்களுக்கு ரஞ்சனி(வயது 15) என்ற மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்
    • ரஞ்சனி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ராயப்பநாடானூர் மேல தெருவை சேர்ந்தவர் ராஜ கண்ணன். இவரது மனைவி தாழம்பூ. இவர்களுக்கு ரஞ்சனி(வயது 15) என்ற மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    தற்கொலை

    கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகண்ணன் இறந்துவிட்டார். இதனால் தாழம்பூ தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். ரஞ்சனி ஆவுடையனூர் அருகே உள்ள மாடியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் ரஞ்சனி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததை அறிந்த தாழம்பூ அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

    வீட்டு வேலை

    அப்போது ரஞ்சனி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்த சென்று ரஞ்சனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தாழம்பூவுக்கு நேற்று திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால், அவர் தனது மகளை வீட்டு வேலைகளை செய்ய சொல்லி உள்ளார். அப்போது அவர் சரிவர வேலை செய்யாததாக தாழம்பூ கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×