search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகையால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு - பூ மார்க்கெட்டில் குவிந்த வியாபாரிகள்
    X

    பாவூர்சத்திரம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்த காட்சி.


    ஓணம் பண்டிகையால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு - பூ மார்க்கெட்டில் குவிந்த வியாபாரிகள்

    • தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
    • கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, ரோஜா பூ, கேந்தி பூ உள்ளிட்ட பூக்கள் இந்த சந்தைகளுக்கு விற்பனைக்காக விவசாயி கள் கொண்டு வருவார்கள்.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை இல்லாததால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் மற்றும் கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1100-க்கும். கேந்தி பூ கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனை ஆகிறது.

    வரக்கூடிய நாட்களில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரி விக்கின்றனர் இதனால் இப்பகுதியில் உள்ள பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×