search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prizes"

    • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    சாயல்குடி

    கடலாடி நகர் தேவர் உற வின்முறைக்கு பாத்தியப் பட்ட பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 116-ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு வருகிற 28-ந் ேததி ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழுவினர் சார்பில் மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராம நாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி நகர் தேவர் உறவின்முறை தலைவர் சக்திவேல் முன்னிலை வகிக்கிறார். மாட்டு வண்டி பந்தயத்தை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவரும் கடலாடி ஒன்றிய அ.தி.மு.க. குழு தலைவரு மான முனியசாமி பாண்டியன் போட்டியை நடத்தி வைக்கிறார்.

    பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்த யத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனிய சாமி தொடங்கி வைக்கிறார். சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    • அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுஅமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    இதில் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய ங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரிகளில் முதல் நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    இதைத்தொடர்ந்து 2-ம் நாள் கருத்தரங்கம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிய பெருமை கருணாநிதியைேய சேரும். அந்த வகையில் மாண வர்களுடைய அறிவுத்திறன் கருணாநிதியை பற்றிய புரிந்து ணர்வு, சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு இவற்றை யெல்லாம் மாணவர்கள் பேச்சுப்போட்டி வாயிலாக எடுத்துரைத்துள்ளனர்.

    இதனுடைய விளைவு இன் றைக்கு இருக்கின்ற இளம் பிள்ளைகள் நாளைய தினம் திராவிட சிந்தனையோடும், மொழி உணர்வோடும், பெரி யார், அண்ணா, கருணாநிதி ஆகி யோரின் கனவினை நனவாக்கி சமூகத்திற்கு பணியாற்றுகின்ற நல்லப் பணியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் சட்டப்பே ரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், சட்டப்பேரவை துணை செயலர் அய்யம்பெ ருமாள், சட்டப்பேரவை துணை செயலாளர் சாந்தா, சட்டப்பேரவை சார்பு செயலர் லோகநாதன், மண்டல இணை இயக்குநர் தன்ராஜ் (தஞ்சாவூர்), அரியலூர் வருவாய் கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், உடையார்பா ளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகராட்சி உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.

    • போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    தென்காசி:

    இடைகால் சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சதுரங்க போட்டி சிவகிரி பாரத் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி, தரணி மெட்ரிகுலேஷன் பள்ளி,கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி , வாசுதேவநல்லூர் அகஸ்தியா பள்ளி, இடைகால் அரசினர் பள்ளி, ஏ.ஆர்.எஸ் மதார் குருகுலம் பள்ளி,ஆகிய பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சதுரங்க போட்டியில் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக நடக்கும் போட்டியில் ஆனந்தன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டுக்குள் தென்காசி மாவட்டத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளை உருவாக்குவோம், அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் சிந்தனை திறன்களை வளர்க்கும் விதமான புத்தகங்கள், பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராமப்புற குழந்தைகள் தங்களது அடுத்த கட்ட சிந்தனை சார்ந்த போட்டிகளுக்கு தயாராகவும் , மிகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    போட்டியில் குழந்தை களும் , ஏராளமான பெற்றோர்களும் பொதுப் பிரிவில் ஆர்வமாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிக்காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ். எஸ். செண்பகவிநாயகம், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முருகேசன், ஐ.பி.எம். இந்திய தனியார் நிறுவனர் மாரிமுத்து, நடுவர்கள் பிரகாஷ்,சிவகணேஷ், மகாராஜன் உணவு பாதுகாப்பு வழங்கல், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், சேகர் கிராமப்புற ஆய்வாளர், சிவராமன் ஸ்ரீ குமரன் குரூப் ஆப் கம்பெனி, மருத்துவர் ரம்யா, மிரில்லா, தேவி ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஒருங்கினைப்பாளர் இசக்கி முத்து ஏற்பாடு செய்திருந்தார்.

    போட்டி நடந்த இடத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சிறு பிரசாரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கும் பைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத முறையில் தேவிகா மகளிர் சுய உதவி குழு மூலம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்பு அவை மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
    • முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தினவிழா திருத்துறைப்பூண்டி பாரதமாதா முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா தலைமை தாங்கினார். வக்கீல் அரசு தாயுமானவா் முன்னிலை வகித்தாா். முன்னதாக பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, மூத்தக்குடி மக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்க ப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவிப்பெறும் முதியோா் இல்லங்களில் இருந்து சமூக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    பின்னர், முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளி ப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனா். முதியோா் இல்லங்களை நடத்தி வரும் நிா்வாகிகளை மாவட்ட சமூகநல அலுவலா் பாராட்டி பாிசுகள் வழங்கி சிறப்பித்தாா்.

    விழாவில் திருத்து றைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய சேவிகா, கிராம சேவிகாக்கள், வக்கீல் இன்குலாப், திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய உளவியல் ஆலோசகர் மெர்லின் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

    பாரதமாதா முதியோா் இல்ல காப்பாளா் புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

    முடிவில் திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினாா்.

    • ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
    • கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறை வடைகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டு சாலை அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்தநாளி னை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி லட்சுமணன் ஆகியோா இன்று (14.10.2023) கொடி யசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி யும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்படி, அண்ணா பிறந்த நாளினை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று, விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு, மிதி வண்டி போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி யானது, 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலி யனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தி லும், 13 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலியனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம் வீரன் கோவிலி லும், 15 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி யானது, கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பக்கம், காகுப்பம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 15 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்திலும், 17 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலி யனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் வழி யாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறைவடைகிறது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்க ளுக்கு ரூ.5000-, 3,000-, 2,000-, எனவும் 4 முதல் 10 வரை இடங்களை பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250- வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், கோலி யனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சி தாநந்தம், மாவட்ட விளை யாட்டு அலுவலர் வேல்முரு கன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் ஞானப்பிரகாஷம், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் சோமநாதன், மனோ கரன், மாரியப்பன், தாமோதரகண்ணன், பால முருகன், ஆவுடையப்பன், மாநகர தலைவர் கணேசன், துணைத்தலைவர் சாமி, துணை அமைப்பாளர்கள் ஆனந்த், அற்புதராஜ், பழனி, சீதாலட்சுமி, ரமேஷ், ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் விழாவை தொடங்கி வைத்து பேசி னார்.

    விழாவில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக் குமார், மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட துணைச்செய லாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் பாலகுருசாமி, வக்கீல் அசோக், ரமேஷ், விஸ்வநாதராஜா, சீனி வாசன், துணை அமைப்பா ளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ராமர், பகுதி செயலாளா ஜெயக் குமார், மாவட்ட பிரதிநிதி கள் நாராயணன், செல்வ குமார், சேர்மபாண்டியன், மாநகர அணி அமைப்பா ளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், சீதாராமன், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, குமரன், இலக்கிய அணி சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சி லர்கள் சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, நாகேஸ்வரி, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் பால குருசாமி, பொன்னுச்சாமி, கருப்பசாமி, சேகர், முத்து ராஜா, ராஜாமணி, சக்தி வேல், சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், குருசாமி மற்றும் கருணா, மணி, அல்பட், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி னார். மாவட்ட தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார்.

    • காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருபவா் மாணவி சபா்நிகா ஸ்ரீ..
    • மெ.சபா்நிகா ஸ்ரீயை பாராட்டி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

    காங்கயம்,:

    காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருபவா் மாணவி சபா்நிகா ஸ்ரீ.

    இவா் திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொண்டு 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்தார்.

    இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், செங்கப்பள்ளி பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி மெ.சபா்நிகா ஸ்ரீயை பாராட்டி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

    மாணவிக்கு காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதியாா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கைப்பந்து, இறகு பந்து, எறிபந்து, கபடி மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பின்னர் பள்ளி மாணவர்கள் தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை சுற்றி வந்து பள்ளி தாளாளரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், விளையாட்டு கம்பத்தில் தீபத்தை ஏற்றி தடகள போட்டியை தொடங்கி வைத்தார்.

    12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற புனித அந்தோணியார் பப்ளிக் பள்ளிக்கு வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியின் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    • இந்து சமய பண்பாட்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5 பள்ளிகளில் இருந்து 105 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விவேகானந்தா கேந்திரத்தின் சமூக நல தொண்டர் சண்முகபாரதி தலைமை தாங்கி சமுதாய முன்னேற்றத்தில் கேந்திரம் ஆற்றி வரும் பணிகள், போட்டிகளின் நோக்கம், விதிமுறைகள், பாரத பண்பாட்டில் ஒழுக்கநெறிகள், வீரம், விவேகத்துடன் வாழ்வது குறித்து பேசினார்.தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5 பள்ளிகளில் இருந்து 105 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு உடன்குடி பிரியாகேஸ் ஜெ.தர்மராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர்கள் பொன்ராஜ், சந்திரபோஸ், சின்னத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப் பாக பணியாற்றிய வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேசன் முதல் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரெங்கநாதன் 2-ம் பரிசும், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் 3-ம் பரிசும், சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் காரியா பட்டி தனி வட்டாட்சியர் அய்யக்குட்டி முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்தி 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் மகேஸ்வரி 3-ம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன் முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி மற்றும் வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியர் (பொ) ரமேஷ்குமார் ஆகியோருக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப்பிள்ளை 2-ம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்க ளில் ராஜபாளையம் வட்டத்துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தன் 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜ் 3-ம் பரிசும், அதிக எண்ணிக்கை யில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்டம் நில அளவர் காஜாமைதீன் முதல் பரிசும், ராஜ பாளையம் வட்டம் குறுவட்ட அளவர் காளிமுத்து 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் சார் ஆய்வாளர் சங்கிலீஸ் வரி 3-ம் பரிசினையும் கலெக்டர் வழங்கினார்.

    • புள்ளம்பாடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அதிக மாணவர்களை சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு பரிசு
    • கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசினார்

     டால்மியாபுரம்  

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் பயிற்றுநர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி உடன் மாதம் ரூ 750 உதவித்தொகை ,விலையில்லா மிதிவண்டி, சீருடைகள்,காலணிகள், வரைபட கருவிகள்,பாட புத்தகங்கள், புதுமைப்பெண் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் தங்களின் மூத்த அல்லது இளைய சகோதரிகள், உறவினர்கள் மற்றும் மகளின் தோழியர்கள் பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ,தொழிற்பயிற்சி மையத்தில் அதிக பயிற்றுநர்களை சேர்ப்பவர்களுக்கு நானே சிறந்த தன்னார்வலர் விருது மற்றும் ரொக்க தொகை ரூ10 ஆயிரம் பரிசு வழங்கி கௌரவப்படுத்துவேன் என கூறி,தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழாவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் ,தாசில்தார் விக்னேஷ்

    முகாமில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் பாஸ்கரன் புள்ளம்பாடி சேர்மன் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி செயல் அலுவலர் உள்ளிட்ட தொழிற்பயிற்சி அலுவலர்கள்,மருத்துவ குழுவினர்,தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தொழில் பயிற்சி நிலைய முதல்வர் குப்புராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் தொழிற் பயிற்சி நிலைய பணியமர்த்தும் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.

    • தேசிய அளவிலான திறானாய்வு தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    • சிறந்த முதல்வர் கேடயம் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் நித்யா தினகரனுக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழா விழாவிற்கு அரியப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.டி தினேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார்.

    மேலும் தேசிய அளவிலான திறானாய்வு தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற மாணவி அனோஷ்கா மற்றும் 5-ம் இடம் பெற்ற மாணவி இன்ஷிகா ஆகியோருக்கு தலா ரூ.1,200 ரூ.1,000 க்கான காசோலைகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்க ளையும் வழங்கப்பட்டது.

    கல்வி வளர்ச்சி நாளன்று பள்ளியின் சார்பில் நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

    மேலும் இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளியில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு இடையேயான பெகாசஸ் போட்டியில் சக்தி வித்யாலயா பள்ளி பங்கேற்று இக்னைட் மைன்ட்ஸ் போட்டியில் வெற்றிகண்டு 2-ம் பரிசு பெற்ற 9-ம் வகுப்பு மாணவிகள் தனிஷா மற்றும் சஜிதா விற்கும், அறிவியல் திறனாய்வு போட்டியில் 3-ம் பரிசு பெற்ற மாணவன் ஜெய் ஸ்ரீதருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினரால் கொடுக்கப்பட்டன.

    பாரத் பள்ளியின் சிறப்பு விருதான சிறந்த முதல்வர் கேடயம் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் நித்யா தினகரனுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் நடைபெற்ற முதலாம் கபடி சுற்றில் சிறப்பாக வெற்றி பெற்று தகுதியடைந்த மாணவ பிரிவினர் பின்னர் தென்மண்டல கபாடிபோட்டியிலும் பங்குப் பெற்று வெற்றியடைந்தனர். அவர்களுக்கான வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

    இடைகால் ஸ்டஅக் பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற கோகோ போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4-ம் இடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள்செய்திருந்தார்.

    ×