search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "contest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
  • சிறுவர்-சிறுமிகள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

  இந்த போட்டியில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

  போட்டியை குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாத்தப்பன், டாக்டர் சிங்காரவேலு, துணை நீதிபதி டாக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.

  இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 20 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு வல்லம் சென்று மீண்டும் மைதானம் வரையும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு தனித்தனியாக 5 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவ கல்லூரி முதல் கேட் வரை சென்று மீண்டும் மைதானம் வரையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

  அதன்படி போட்டியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் மாரத்தான் ஓடினர்.

  முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பரிசினை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், நெல்லை ஜீவா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.10 பத்தாயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இது தவிர 20 நபர்களுக்கு ரூ.500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

  இதுபோல் சிறுவர் -சிறுமிகள் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ,கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் தலா 3 பேர் என 6 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக சரவணமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
  • தேர்தல் ஆணையாளர் சீனிவாசன், சரவணமுருகனிடம் சான்றிதழை வழங்கினார்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளராக சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான எம்.ஏ.பி. சரவணமுருகன் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.

  விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தேர்தல் ஆணையாளர் சீனிவாசன், சரவணமுருகனிடம் சான்றிதழை வழங்கினார்.

  கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக குருசாமி, பொருளாளராக விவேகானந்தன், துணை செயலாளராக ராஜா விக்னேஷ் ராமேஸ்வரி, மாவட்ட பிரதிநிதியாக முத்து, மாமுண்டி, வேல்முருகன், லட்சுமணன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரசில் இணைந்த சத்ருகன் சின்ஹா, பாராளுமன்ற தேர்தலில் பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #ShatrughanSinha #Congress #PatnaSahib
  புதுடெல்லி:

  சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இதையடுத்து கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த வாரம் டெல்லி சென்ற சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

  இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரசில் இணைந்தார். 

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

  இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளது. இவர் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்துப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ShatrughanSinha #Congress #PatnaSahib
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு ரூ.417 கோடி என்றும், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7 கோடி என்றும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
  நாகர்கோவில்:

  கன்னியாகுமரி தொகுதியில் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர்.

  பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 சொத்து உள்ளது.

  அசையும் சொத்தாக ரூ.50 லட்சத்து 56 ஆயிரத்து 298, அசையா சொத்தாக ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 உள்ளது என்றும் அவர், தனது வேட்பு மனுவில் கூறி உள்ளார். மேலும் கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு மொத்தம் ரூ.417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 சொத்து உள்ளது.

  அசையும் சொத்துக்களாக அவரது பெயரில் ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302-ம், அசையா சொத்துக்களாக ரூ.181 கோடி 95 லட்சம் மதிப்பில் சொத்துக்களும், பரம்பரை சொத்தாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  வசந்தகுமாரின் மனைவி பெயரில் அசையும் சொத்தாக ரூ.28 லட்சத்து 35 ஆயிரத்து 142-ம், அசையா சொத்தாக ரூ.4 கோடி 75 லட்சமும் உள்ளது.

  மேலும் தனது பெயரில் வங்கி கடனாக ரூ.154 கோடியே 75 லட்சத்து 11 ஆயிரத்து 439 இருப்பதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்து 689 இருப்பதாகவும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் ரூ.2 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.  #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
  ஜம்மு:

  87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

  அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். 

  முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.

  இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

  தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அங்கு பத்து மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. 

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 6-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

  இந்த தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகனுக்கு காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 56 வேட்பாளர்களைக் கொண்ட 5-வது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #LSPolls #Congress #AbhijitMukherjee
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்கு பிறகு இப்பட்டியல் வெளியிடப்பட்டது.  ஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

  மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. அங்குள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

  காக்கிநாடா தொகுதியில், முன்னாள் மத்திய மந்திரி பல்லம் ராஜு, பபட்லா (தனி) தொகுதியில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஜே.டி.சீலம் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

  அசாம் மாநிலம் மங்கள்டோய் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. புவனேஸ்வர் கலிடா, ஒடிசா மாநிலம் கலஹண்டியில் முன்னாள் மத்திய மந்திரி பக்த சரண்தாஸ், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  #LSPolls #Congress #AbhijitMukherjee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #ThangaTamilSelvan #AndipattiConstituency
  சென்னை:

  தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் 1 பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

  இந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிக்களும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அ.தி.மு.க.- தி.மு.க. இரு கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் உள்ள கூட்டணி கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டிருந்தார். இதில் 24 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

  அடுத்த பட்டியலை இன்னும் 2 நாளில் டி.டி.வி. தினகரன் வெளியிட உள்ளார். இதில் 16 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.

  இந்த பட்டியலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச் செல்வன் பெயர் இடம் பெற்றுள்ளது. #ThangaTamilSelvan #AndipattiConstituency
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
  பெங்களூரு:

  கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மாண்டியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் மாண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மாண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மாண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.

  அதன்படி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.

  தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.

  என்னிடம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மாண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

  வருகிற 20-ந் தேதி (நாளை) மாண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மாண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

  எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

  தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

  எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மாண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

  கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.

  நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மாண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.

  அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத் துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

  அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

  காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்-மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மாண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

  எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

  இவ்வாறு சுமலதா கூறினார்.

  இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Sumalatha #MandyaConstituency
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். #NaveenPatnaik #Odishaassemblypolls
  புவனேஸ்வர்:

  ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.

  இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NaveenPatnaik #Odishaassemblypolls
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate
  தஞ்சாவூர்:

  பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி  அமைத்து சந்திக்கும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

  இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.  இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat  #TMCcandidate #Thanjavurcandidate