search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle race"

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டி
    • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோர் வழங்கினர்.

    முதல் பரிசு ரூ.5 ஆயிரம் 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலைகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    • சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்ளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகள் பெயர்கள் வருமாறு:-

    13 வயது பிரிவில் முதல் 3 இடங்களில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தருண் வலம்புரிவேல், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி பிரதீப் ராஜ், அமிர்த வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஷனேல் ஆண்டர்சன், மகளிர் பிரிவில் ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி சந்தியா, தேன்மொழி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிரதிக்ஷாஸ்ரீ வெற்றி பெற்றனர்.

    15 வயது பிரிவில் ராமநாதபுரம் சதக் கபீர் பப்ளிக் பள்ளி சீனிபர்ஹான் முகமது, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி சச்சின், தர்வின் லியா. மகளிர் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அசனத்துல் பேகம், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹர்னிஸ்ரீ, ஜெய்ஸ்ரீ.

    17 வயது பிரிவில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைபள்ளி தன சேகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி அபி ேஷக், உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி அசோக் பிரபு. மகளிரில் ராஜா மேல்நிலைப்பள்ளி சர்மிளா, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹார்மி, மண்டபம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காருண்யா வென்றனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-வது பரிசு ரூ.3000, 3-வது பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. 4 முதல் 10-வது இடம் வந்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு தொகை, சான்றிதழ்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • மதுரையில் அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • சைக்கிள் போட்டிக்கு மானியமாக அரசு ரூ.3 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததை உயர்த்தி தற்போது இந்த சைக்கிள் போட்டிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    மதுரை

    தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த ஆண்டுகளில் சைக்கிள் போட்டிக்கு மானியமாக அரசு ரூ.3 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததை உயர்த்தி தற்போது இந்த சைக்கிள் போட்டிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    இன்று காலை அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பிரிவு சார்பில் நடந்த சைக்கிள் போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தப் போட்டி 6 பிரிவுகளாக நடந்தது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 10 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் இருந்து புதூர்,மூன்று மாவடி, கடச்சனேந்தல், கள்ளந்திரி வரை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 வரையிலான இடத்திற்கு வருபவர்களுக்கு தலா ரூ.250-த்திற்கான காசோலைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மேயர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா வைமுன்னிட்டு நாளை 9-ந்தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

    13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நம் நாட்டில் தயாரான சாதாரண சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ், எமிஸ் எண் பெற்று வர வேண்டும்.போட்டி துவங்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அதற்கான ஆவணங்களுடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. சைக்கிள் போட்டியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 292 பேரும், மாணவிகள் 98 பேரும் பங்கேற்றனர்.

    13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி மாணவன் கார்த்திக், 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நித்தீஸ்வரன், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாமுவேல் டேனியல் ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

    13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, 15 வயதிற்குட்பட்ட பிரிவில் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜானகி ஆகியோர் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நான்காம் இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
    ×