search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pavurchathiram"

    • சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஏ.எம்.நவீன அரிசி ஆலை லட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.பொன்னொளிர் ஏஜென்சி அருணாச்சல முத்துச்சாமி , கோவா கேட்டரிங் சுரேஷ், எஸ்.ஆர்.எஸ்.ஹார்டுவேர்ஸ் சுப்புராஜ், ரஜினி பத்திர எழுத்தாளர் ரஜினி, கிளாசிக் கம்ப்யூட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். கே.ஆர்.பி. நவீன அரிசி ஆலை உரிமையாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார்.

    பொன் அறிவழகன் தொடக்க உரையாற்றினார்.கோல்டன் டிரேடர்ஸ் செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார். பைம் தொழில் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசினார்.நிகழ்ச்சியை ராஜாதி ராஜா நவீன அரிசியாலை ஆனந்த் ,நண்பா கேக் சங்கரபாண்டியன், ராஜாமணி திருமலை கொழுந்து, ஆனந்த், ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கே.எஸ். சினேகா பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சுடர் பரமசிவம் நன்றி கூறினார்.

    • நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.


    • பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்
    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்

    நெல்லை:

    பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன்(வயது 35). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    குடும்பம் நடத்த மறுப்பு

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வர நேற்று முன்தினம் ஜெகநாதன் சென்றுள்ளார்.

    ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு வந்து தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    தற்கொலை

    அங்கு ஜெகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து சென்றுள்ளனர். அதில் சாவுக்கு காரணமானவர் குறித்த பெயர் விபரங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரைணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

    சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு கும்பஜெபம், மூலமந்திரஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனையும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், செட்டியூர், பனையடிப்பட்டி, செல்வவிநாயபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், நாட்டார்பட்டி, கல்லூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் . தொடர்ந்து அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல், இரவு 8 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பாவூர்சத்திரம் விவேகானந்தர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவின் 6-ம் நாளான நாளை மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாவூர்சத்திரம் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக 22-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 6-ம் நாளான நாளை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கும்ப ஜபம், மூல மந்திர ஹோமம், யாகசாலை பூஜை,சஷ்டி ஹோமம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சியும், மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    இரவு 7 மணி அளவில் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். எனவே பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடுவர் என்பதால் பாதுகாப்பு பணியில் பாவூர்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து சென்று பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.
    • போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்று பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட முருகன் அங்கேயே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.42 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • சம்பவத்தன்று தலைமை ஆசிரியை ஜான்சி ராணி அறையில் இருந்து வெளியே வந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜான்சி ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது அறையில் இருந்து வெளியே வந்து அந்த வழியாக வந்த மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் எவ்வித பாதிப்பு மற்றும் உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.
    • 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஜெகன் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் குளித்து விட்டு தனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை அருகே துணியை காய போட சென்றுள்ளார்.

    அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் ஜெகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.
    • சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் 1.48 லட்சம் மதிப்பிலான 3615 லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் நின்று லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் லாட்டரி டிக்கெட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து பாவூர்சத்திரம் பகுதிகளில் விற்பனை செய்த தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நந்தகுமார் (வயது 49) என்பதும் அவர் சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் 1.48 லட்சம் மதிப்பிலான 3615 லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

    லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் ரொக்கம் ரூ. 30,000-தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மேலும் லாட்டரி டிக்கெட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்கு மூளையாக செயல்பட்டு வந்த தென்காசி மேலகரத்தை சேர்ந்த மற்றொரு நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது
    • பாவூர்சத்திரம் போலீசார் ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திப்பணம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (39) மற்றும் வடக்கு கொண்டலூர் செங்கநாடானூர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய இருவரும் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது
    • ஆடுகள் விலை ரூ.4 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் குவிந்தனர். அங்கு ஆடுகள் விலை ரூ.4 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.இன்று ஒரே நாளில் லட்ச க்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



    • ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா , ஆசிரியர்கள் தின விழா, மன்றம் எழுச்சி விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி நினைவு பரிசுகள் வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் ஆசிரியர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கீழப்பாவூர் சரகம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா , ஆசிரியர்கள் தின விழா, மன்றம் எழுச்சி விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பி.ஆர்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்சியில் கீழப்பாவூர் ஒன்றிய ஆசிரியர் மன்றம் தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அண்ணாதுரை, கணேசன், ரவி, சீனிராஜ் என்ற சின்னசாமி, நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் மன்றம் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கத்துரை வரவேற்றார். செல்வன் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி நினைவு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன், தி.மு.க. ஒன்றிய செல்லாளர் சீனித்துரை கழக வழக்கறிஞர் ஏ.பி. அருள் ஆகியோர் பாராட்டி பேசினர்.

    ஆசிரியர் மன்றம் நிர்வாகிகள் அருள்மணி, இளமதி, இளம்பரிதி சண்முகசிங், அய்யனார், சுந்தரவேல், ராஜசேகர், சீனிவாசகம், ஜெயசிங், ஜெபஸ்தியான், குமரகுருபரன் மகளிர் அணி நிர்வாகிகள் உமா, அருள்மதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . ஒன்றிய பொருளாளர் அகஸ்டஸ் ஜாண் நன்றி கூறினார்.

    ×