search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entrepreneurship"

    • விருதுநகர் அருகே தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் இணைந்து அத்திகுளம் கிராமப்புற மக்களுக்கு தொழில் முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

    முகாமை அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகமூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர்சுதா பெரியத்தாய் வரவேற்றார். யு.பி.ஏ. ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி தொடக்க உரையாற்றினார். விருதுநகரின் டி.ஐ.சி.யின் பொது மேலாளர் ராமசுப்ரமணியன், கிராமப்புற தொடக்கத் தொழில்முனைவோருக்கான டி.ஐ.சி. திட்டத்தை பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து வழக்குறைஞர் ராஜகோபால், விருதுநகர் மார்க்கெட்டிங்கில் சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மார்க்கெட்டிங் மேம்படுத்தும் வழி பற்றி பேசினார்.

    விரிவுரையாளர் பீட்டர் நிர்மல்ராஜ், பி.ராஜசுரேஷ்வரன் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினர். மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் ஒருங் கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினர். இதில் மாணவர்கள் மற்றும் அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பேராசிரி யைகள் அன்னபாக்கியம், பத்மப்ரியா, கலைவாணி மற்றும் மெர்லின்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் தொழில் முனைவோர் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக தொழில் முனைவோ ருக்கான வணிக யோசனைகள் குறித்த நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கலந்து கொண்டு தொழில் மேம் பாட்டு செயல்முறையின் 6 படிகளான யோசனை உருவாக்கம், சந்தை ஆராய்ச்சி, சாத்தியக்கூறு ஆய்வு, வணிகத் திட்டம், நிறுவன தொடக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவ- மாணவிகளிடையே உரை யாற்றினார்.

    இளம் தொழில் முனை வோரான சிலம்பரசன் பேசுகையில், தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதற்கு தொடர்ந்து கல்வி மற்றும் அறிவு தேவைப்படுகிறது. உங்கள் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்து வதற்கான சிறந்த வழி,புதிய தகவல்களையும் உத்வேகத்தையும் தொடர்ந்து தேடுவதே ஆகும் என அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசி ரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் தொழில்துறை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார். தொழில் முதலீட்டு கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் பழனிவேல், தொழில் முதலீட்டு கழக மறைமலைநகர் கிளை மேலாளர் சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் சிப்காட் திட்ட அலுவலர் நளினி குறு சிறு தொழில் முதலீட்டு அசோசியேஷன் செயலாளர் தனசேகரன், கருங்குழி அரிசி ஆலை செயலாளர் குமார் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    இதில் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகையாக ரூ.30 கோடி வழங்கப்பட்டது.

    • டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவி பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக் கான புதுமை திட்டங்கள் என்னும் தலைப்பில் சர்வ தேச கருத்தரங்கு நடைபெற் றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் கருத்தரங்கை தொடங் கிவைத்து பேசினார்.

    முதல் அமர்வில் நைஜீ ரியா, ஆப்பிரிக்கா பல் கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் ராஜன் துரை ராஜ் கலந்து கொண்டு தொழில் முனைவோர் வெளிநாட்டு முதலீடு செய் யும் முறைகள் குறித்து பேசி னார்.

    இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் அர பாத் அலி சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக உஸ் பெகிஸ்தான், தொழில் நுட் பத்துறை இணைப்பேரா சிரியர் சுபைர் அலி கலந்து கொண்டு சிறு தொழில் வளர்ச்சியில் கணினி வழி கற்றலின் தாக்கம் குறித்து பேசினார். உதவி பேராசிரி யர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை பேராசிரியர் வேதிராஜன் கலந்து கொண்டு பேசினார். உதவிப்பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கு நடந்தது.
    • டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் டை ரீச் என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமைப்பின் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது:- சிறிய நகரங்களில் இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுவதே எங்களது முக்கிய மான நோக்கமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு சிறிய நகரங் களை கண்டறிந்து தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவ தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.

    தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன், தொழில் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறுவதற்கான செயல்பாடுகளை பற்றி பேசினார். டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4,157 தொழில் முனைவோர்களுக்கு ரூ.510 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • அமைச்்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகரில் தமிழக அரசின் பல்வேறு துறைகள், திட்டங்கள், தாட்கோ மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் கடன் வசதி எளிமையாக்கல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 915 தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.114.51 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 480 வங்கி கிளைகள் மூலம் 2023-2024-ம் ஆண்டு முதல் காலாண்டில் 3242 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.396.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2023-2024 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டின் முதல் மாதத்தில் 915 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.114.51 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், முதன்மை மண்டல மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தூத்துக்குடி) நாகையா, உதவி பொது மேலாளர்(கனரா வங்கி, தூத்துக்குடி) சுரேந்திர பாபு, மண்டல மேலாளர்(பாரத் ஸ்டேட் வங்கி, தூத்துக்குடி) செந்தில்குமார், மண்டல மேலாளர்(இந்தியன் வங்கி, காரைக்குடி) தாமோதரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச் செல்வன், விருதுநகர் வர்த்தக தொழிற்சங்க தலைவர் யோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டத்தில் பயன்பெறலாம்.
    • பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழி யும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபுழு வளர்ப்பு போன்ற தொழில்கள் தொடங்கலாம். ஆனால் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    மேலும் அறுவடை எந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, சேமிப்பு கிடங்கு, எரி பொருள் விற்பனை நிலையம் போன்றவை அமைக்கலாம்.

    உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தயாரித் தல், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், நகரும் அலகுகள் கொண்ட சுற்றுலா ஊர்திகள், கலவை எந்திரங்கள், மருத்துவ அவசர ஊர்தி, குளிர்சாதனம் பொருத்திய ஊர்தி உள்ளிட்ட எந்த திட்டமா கவும் இருக்கலாம். இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரி வாக்கம், பல்துறையாக்கம், நவீன மாக்கல், தொழில் நுட்ப மேம்பாட்டு முன்மொழிவு களுக்கும் உதவி வழங்கப்படும்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 விழுக்காடு ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி. இத்துடன் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 விழுக்காடு வட்டி, மானிய மும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தனி நபர், பங்குதாரர் நிறுவனம், ஒரு நபர் கம்பெனி, தனியார் வரைய றுக்கப்பட்ட நிறுவனங்களும் (பிரைவேட் லிமிடெட்) இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற 18 வயது முடிந்து அதிகபட்சம் வயது 55 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 விழுக்காடு வங்கி கடனாக பெறுவதற்கு 35 விழுக்காடு அரசின் பங்காக முன்முனை மானியமாக வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • சிவகங்கை அருகே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
    • சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லா கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்புவனம் சமயபுரத்தாள் சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார். சிவகங்கை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் தேவராஜ், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை, மகளிர் திட்ட உதவி மேலாளர் ராஜ்குமார், பொருட்களை சந்தைப்படுத்துதல் உத்தி குறித்து பேசினார். இதில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பழைய மாணவர்-தொழில்முனைவோர் ராமர் நன்றி கூறினார்.

    • ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
    • எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூர் எஸ்.எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் மணிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி மேலாளர் தேவராஜ், உதவி இயக்குனர் சிவஅய்யனன், கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சிறு தொழில் தொடங்குவது குறித்தும், அதனை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி காண்பது குறித்தும், அதில் பின்பற்றக்கூடாத நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் பேசினர். எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.

    தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.

    உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.

    இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை

    அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு, மாநில தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சஞ்சீவ், பொருளாளர் பாஸ்கர், அவைத்தலைவர் நாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும். புதிய மருந்து வரைவு சட்டப்படி மருந்துகள் மீதான தரக்குறைவுக்கு, சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    • இளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ''தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர்கள்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் மைய, கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்துகொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ×