search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vennimalai temple"

    • பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

    சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு கும்பஜெபம், மூலமந்திரஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனையும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், செட்டியூர், பனையடிப்பட்டி, செல்வவிநாயபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், நாட்டார்பட்டி, கல்லூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் . தொடர்ந்து அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல், இரவு 8 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பாவூர்சத்திரம் விவேகானந்தர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    ×