பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நாளை மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.
வென்னிமலை முருகன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
வென்னிமலை முருகன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாவூர்சத்திரம் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக 22-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 6-ம் நாளான நாளை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கும்ப ஜபம், மூல மந்திர ஹோமம், யாகசாலை பூஜை,சஷ்டி ஹோமம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சியும், மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

இரவு 7 மணி அளவில் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். எனவே பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடுவர் என்பதால் பாதுகாப்பு பணியில் பாவூர்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com