search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vennimalai murugan temple"

    • வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசி பெருந்திரு விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • அன்னதான நிகழ்ச்சியை ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசி பெருந்திரு விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும், சப்பர பவுனியும் நடை பெற்று வந்தது. 10-ம் திருவிழாவான நேற்று நாடார் சமுதாயம் சார்பில் நடத்தப்பட்டது.

    காலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடை யானூர், திப்பனம்பட்டி, அரியப்பபுரம், கல்லூரணி, குறும்பலாபேரி, கீழப்பாவூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் பறவை காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    முன்னதாக தட்சணமாற நாடார் சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளரு மான ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து திரு விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்தார். அவருடன் நிர்வாகிகளான நாராயண சிங்கம், கண்ணன், முருகே சன், கண்ணன்மோகன், பாலசுப்ர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பா.சிவந்தி ஆதித்த னார் மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, செய லாளர் பரமசிவம், மன்ற துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பால் கண்ணன், தங்கதுரை, மேகநாத பிரபு, செல்வ குமார், காமராஜ், வெண்ணி குமார், முருகன், முத்துக் குமார்,சுதன், சண்முகராஜ், லிங்கம், தர்மராஜ், மகேஷ் மற்றும் பா.சிவந்தி ஆதித்தனார் ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் வென்னி மலை முருகன் கோவில் மாசித் திருவிழா 11நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • சப்பரத்தில் சாமி வீதி உலாவரும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள வென்னி மலை முருகன் கோவில் மாசித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    நாளை அதிகாலையில் 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் மற்றும் பாலாபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கூட்டத்திற்கு தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரணியசுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்திருவிழா நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன், கீழப்பாவூர் பால்துரை, வணிகர் சங்க நிர்வாகிகள், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் 10-ம் திருவிழாவில் பால்குடம் எடுத்து வரும் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையப்பட்டி, திப்பணம்ட்டி அரியப்பபுரம், வெங்காலிபட்டி , கல்லூரணி, ஆரியங்காவூரை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது. சாதி ரீதியான வாசகங்களோ, தலைவர் படம் பொறித்த பனியன்களோ அணியக்கூடாது. சாதித்தலைவர்கள் படம் போட்டு விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. 10-ம் திருவிழாவன்று மதியம் 12 மணிக்குள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



    • வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவின் 6-ம் நாளான நாளை மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாவூர்சத்திரம் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக 22-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 6-ம் நாளான நாளை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கும்ப ஜபம், மூல மந்திர ஹோமம், யாகசாலை பூஜை,சஷ்டி ஹோமம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சியும், மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    இரவு 7 மணி அளவில் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். எனவே பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடுவர் என்பதால் பாதுகாப்பு பணியில் பாவூர்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ×