search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம்
    X

     டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் வென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம்

    • வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசி பெருந்திரு விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • அன்னதான நிகழ்ச்சியை ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசி பெருந்திரு விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும், சப்பர பவுனியும் நடை பெற்று வந்தது. 10-ம் திருவிழாவான நேற்று நாடார் சமுதாயம் சார்பில் நடத்தப்பட்டது.

    காலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடை யானூர், திப்பனம்பட்டி, அரியப்பபுரம், கல்லூரணி, குறும்பலாபேரி, கீழப்பாவூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் பறவை காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    முன்னதாக தட்சணமாற நாடார் சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளரு மான ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து திரு விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்தார். அவருடன் நிர்வாகிகளான நாராயண சிங்கம், கண்ணன், முருகே சன், கண்ணன்மோகன், பாலசுப்ர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பா.சிவந்தி ஆதித்த னார் மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, செய லாளர் பரமசிவம், மன்ற துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பால் கண்ணன், தங்கதுரை, மேகநாத பிரபு, செல்வ குமார், காமராஜ், வெண்ணி குமார், முருகன், முத்துக் குமார்,சுதன், சண்முகராஜ், லிங்கம், தர்மராஜ், மகேஷ் மற்றும் பா.சிவந்தி ஆதித்தனார் ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×