நான்கு வழிச்சாலை பணிக்காக பாவூர்சத்திரம் பஸ் நிலைய நுழைவாயில் ஆர்ச் இடிப்பு

நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதுபாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
பஸ் நிலைய  நுழைவாயில் ஆர்ச் இடிக்கப்பட்ட போது எடுத்த படம்.
பஸ் நிலைய நுழைவாயில் ஆர்ச் இடிக்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

தென்காசி:

நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நெல்லை -தென்காசி இடையே இடைப்பட்ட பகுதியில் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வரும் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையங்களின் முகப்பு பகுதியில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்த இரு முகப்பு ஆர்ச்களும் இடித்து அகற்றப்பட்ட நிலையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக இரவில் ஆர்ச் இடித்து அகற்றப்பட்ட தாக சாலை ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com