என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது
- பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
- மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஆரியங்காவூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 33) மற்றும் வடக்கு பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த தாசன்(44) ஆகிய 2 பேரிடமும் சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதில் இருந்த 27 கிலோ குட்கா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






