search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "entrance"

    • நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரிலுள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் 311 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சரணாலய பகுதிக்குள் வந்துசெல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது பணியாளர், சரணாலய எல்லையில் வன அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே சரணாலயத்துக்குள் செல்ல வேண்டும். சட்டவிதிகளின்படி எல்லை குறிகளை அழிக்கவோ மாற்றவோ கூடாது, வன உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது.

    சரணாலயத்தில் இருந்து அகற்றப்படும் பொருட்களை, சுற்றுப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. சரணாலயத்துக்கு தீ வைக்க கூடாது. எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் எவ்வித ஆயுதத்துடனும் பிரவேசிக்க கூடாது.

    தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து, ஆபத்தான ரசாயனங்களை உள்ளே எடுத்துவரக்கூடாது. தேசிய வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், சரணாலயத்துக்குள் வணிக சுற்றுலா, ஓட்டல், லாட்ஜ் கட்ட முடியாது.தலைமை வன உயிரின காப்பாளர், வன உயிரினங்கள் நலனுக்கு ஏற்ப சரணாலயத்தை ஒழுங்குபடுத்தலாம். கட்டுப்படுத்தலாம்,தேவையெனில் தடை செய்யலாம்.

    சரணாலயம் அறிவிக்கப்பட்ட 3 மாதத்துக்குள், 10 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் நபர்கள் ஆயுத உரிமம் வைத்திருந்தாலும், ஆயுதங்கள் வைத்திருந்தாலும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    தலைமை வன உயிரின காப்பாளர் முன் அனுமதியின்றி, சரணாலயத்தை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் வசிப்பவருக்கு புதிய உரிமம் எதுவும் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்களை வெளியேற்றலாம்.

    அத்துமீறி எடுத்துவரும் பொருட்கள், கருவிகளை பறிமுதல் செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு இதுகுறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
    • பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நெல்லை -தென்காசி இடையே இடைப்பட்ட பகுதியில் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வரும் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையங்களின் முகப்பு பகுதியில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்த இரு முகப்பு ஆர்ச்களும் இடித்து அகற்றப்பட்ட நிலையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக இரவில் ஆர்ச் இடித்து அகற்றப்பட்ட தாக சாலை ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×