search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man"

    • செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூரை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக கனகராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தெற்கு அப்பர்குளத்தை சேர்ந்த கனகராஜ் (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் வெளியே படுத்திருந்த பாக்கியத்தின் தலையில் குழவிக்கல்லை போட்டார்.
    • மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மாலதி (25).

    இவர்கள் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதனால் மாலதி கணவ ரிடம் கோ பித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை பாக்கியம் (65) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவியை கூப்பிட மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மாலதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் பாக்கியம் அவர்கள் இடையே சமாதனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மாலதி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் பிரபாகரன் தனியாக வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பிரபாகரன் தனது மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு வீட்டின் வெளியே படுத்தி ருந்த பாக்கியத்தின் தலையில் குழவி கல்லை போட்டார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்தார்.

    மேலும் பாக்கியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்
    • ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்

    பல்லடம், செப்.24-

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தோகைமலை அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் தரிசு காட்டில் பிணமாக கிடந்தார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்

    கரூர், தோகைமலை அருகே உள்ள பி.சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ரத்னாசலம் (வயது 75). இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ரத்னாசலத்தை அவரது மகன் கவியரசன் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் பண்ணப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையம் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தரிசு காட்டில் அழுகிய நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக கவியரசனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் சென்று அங்கு பார்த்தார். அப்போது அங்கு இறந்து கிடப்பது வீட்டில் இருந்து மாயமான ரத்னாசலம் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்னாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கவியரசன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரத்னாசலம் வயது முதிர்வின் காரணமாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தரிசு காட்டில் போட்டு விட்டு சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     தஞ்சாவூர்:

    கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது60). எலக்ட்ரீசியன்.

    நேற்று காலை இவர் கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.

    இதுபற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிநவீன சிகிச்சை புதுச்சேரியில் முதன் முறையாக செய்துள்ளோம்.
    • மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தார்

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் 86-வயது மதிக்கத்தக்க முதியவர்  மூச்சு விடவும் நடக்க முடியாமல் சிரமப்பட்டு மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார். பிம்ஸ் இருதயவியல் துறை நிபுணர் டாக்டர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் ஹர்ஷவர்தன் சீனிவாசன் ஆகியோர் அவரை பரிசோதித்தனர்.

    அவருக்கு இடது பக்க மின்னோட்ட நரம்பு செயலிழப்பு மற்றும் இருதய செயல் திறன் 25 சதவீதத்திற்கு கீழ் இருப்பதை உறுதி செய்தனர்.மின்னோட்டம் சரியில்லாத இடத்தில் நேரடியாக இடது பக்கத்தில் இருந்து வலது புறத்தில் சிறு ரத்த குழாய் வழியாக நவீனகருவி மூலம் முடுக்கி மின்னோட்ட செயல் திறனை சரி செய்த னர். இது குறித்து இருதய நிபுணர் டாக்டர் அன்பரசன் கூறுகையில் நவீன மின் இயற்பியல் செயல்முறை எனப்படும் அதிநவீன சிகிச்சை புதுச்சேரியில் முதன் முறையாக செய்துள்ளோம். 5நாட்களுக்கு பின் நோயாளி தற்போது மயக்கம் இன்றி 200-மீ நடக்க தொடங்கினார்.

    மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தார்.மருத்துவ குழுவினரை பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் வாழ்த்தினர்.

    • 60 வயதான ஏரண்ணா அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
    • ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார்.

    பெங்களூரு:

    சமீபகாலமாக வயதான தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிலர் இளம் வயதுடைய பெண்களை திருமணம் செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    அந்த வகையில் கர்நாடகத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 30 வயது பெண்ணை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏரண்ணா. 60 வயதான இவர் அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் ஏரண்ணாவின் மகனும், மகளும் அவரை கவனிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

    அதன்படி ஏரண்ணா, தனக்கான வரனை தேடினார். அப்போது மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அனுஸ்ரீ (30) என்ற பெண்ணை அவருக்கு பிடித்து போனது. அனுஸ்ரீ தனது கணவரை பிரிந்த நிலையில் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இதையறிந்த ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார். அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பே கவுடனஹள்ளி பகுதியில் உள்ள கோவிலில் வைத்து ஏரண்ணா-அனுஸ்ரீ திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், வயதை காரணம் காட்டி இந்த திருமணத்தை தவிர்த்திருக்கலாம் எனவும், சிலர் ஏரண்ணா தனது வயதிற்கேற்ப வேறு பெண்ணை மணம் முடித்திருக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.

    இதுபோன்ற பல கருத்துக்களால் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது21). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (21) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்ட 7 பேர் அவரை கட்டையால் அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தாக்கிய இசக்கிராஜா, உச்சிமாகாளி, பாலாஜி, விக்னேஷ், சுந்தர், இசக்கி, பால்துரை ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் இசக்கிராஜா, உச்சிமாகாளி ஆகிய 2 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

    • ஒரே மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்பட்டி பஞ்சா யத்து அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு ேநர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 57). இவர் நேற்று இரவு தனது மனைவி ஷாஜகான் பீவி (52) , பேரன் உமர் (8) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்பட்டி பஞ்சா யத்து அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது களிமேடு அருகே உள்ள நரிமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (20), தமிழ்ச்செல்வன் (22) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு ேநர் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் சையத் அபுதாஹிர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இவரது மனைவி ஷாஜகான் பீவி மற்றும் பேரன் உமர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து தஞ்சை யில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    மேலும் படுகாயமடைந்த ஹரிஹரன், தமிழ்ச்செல்வன் இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகா ரின் பேரில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் உச்சிகட்டளை தெருவை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58).

    விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவா ளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் அவர் யார் ? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இதனைத் தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு அந்த முதியவர் இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×