குடிபோதையில் பெண்களை ஆபாசமாக திட்டிய முதியவர்

கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்
குடிபோதையில் இருந்த முதியவரை  படத்தில் காணலாம். 
குடிபோதையில் இருந்த முதியவரை படத்தில் காணலாம். 
Published on

பல்லடம், செப்.24-

பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com