search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abused"

    • கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்
    • ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்

    பல்லடம், செப்.24-

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    காரமடை அருகே ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து கூட்டுறவு சங்க செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    காரமடை:

    காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இச்சங்கத்தில் 2 ஆயிரத்தி 148 உறுப்பினர்களாக உள்ளனர். சங்க செயலாளராக மனோகரன் என்பவர் உள்ளார். சங்கத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரூ.2 கோடிக்கு மேலாக டெபாசிட் செய்து உள்ளனர்.

    இதில் மனோகரன் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் மனோகரன் கூட்டுறவு சங்கத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

    அவர் நேற்று முன்தினம் அலுவலகம் வந்ததை அறிந்த பொதுமக்கள் அலுவலகத்துதில் திரண்டனர். அவர்கள் மனோகரனை முற்றுகையிட்டு தங்களது பணத்தை திருப்பித்தரக் கேட்டனர். இதனால் மனோகரன் காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முறைகேடு தொடர்பாக புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

    இதற்கிடையே சங்க உறுப்பினர்களும் அங்கு வந்தனர். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து பொதுமக்களின் வைப்புத் தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    கனடாவில் காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது இணையதளத்தில் செய்தியாக வெளிவந்தது.
    டொராண்டோ:

    இந்தியாவில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக கனடா சென்று குடியேறியவர், ராகுல்குமார். அங்கு மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு, எட்மண்டன் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

    ஏஞ்சலிக் என்ற வெள்ளைக்காரப் பெண், ராகுல் குமார் வீட்டு வளாகத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு காரில் சென்றார். அப்போது காரை எங்கு நிறுத்துவது என்பதில், அவருக்கும், ராகுல் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த வெள்ளைக்காரப்பெண் நிதானம் இழந்து இனவெறி பிடித்தவராக ராகுல் குமாரை கண்டபடி திட்டினார். உடனே அதை ராகுல்குமார் செல்போனில் படம் பிடித்தார். அது அந்தப் பெண்ணுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    ராகுல் குமாரை நோக்கி, “நீ எப்படி வேண்டுமானாலும் படம் பிடித்துக்கொள் பக்கி... பக்கி, நீ உன் நாட்டுக்கு போய் விடு” என்று கூறினார். கடைசியில் ராகுல் குமார் கார் மீது அந்தப் பெண் எச்சிலை உமிழ்ந்தார்.

    இந்த இனவெறி தாக்குதல், அங்கு சி.டி.வி. செய்தி இணையதளத்தில் செய்தியாக வெளிவந்தது. வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதில் ராகுல் குமார், “இது போன்று எனக்கு ஒருபோதும் ஏற்பட்டது இல்லை. அந்தப்பெண் பேசிய வார்த்தைகளால் நான் அதிர்ந்து போய் விட்டேன்” என்று கூறி உள்ளார்.

    ஆனால் அந்தப் பெண்ணோ, தான் அப்படி நடந்து கொண்டதற்காக மனம் வருந்தவும் இல்லை. ராகுல் குமாரிடம் வருத்தம் தெரிவிக்கவும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 
    இவ்வளவு காலமாகியும், சிறு குழந்தைகள், பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லாதநிலை மட்டுமல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதும் வேதனை அளிக்கிறது.
    தேசப்பிதா மகாத்மாகாந்தி நாட்டின் சுதந்திரத்திற்கு எவ்வளவு பாடுபட்டாரோ, அதற்கு இணையாக பெண்கள் பாதுகாப்பிலும் அதிக அக்கறையோடு இருந்தார். ‘என்றைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளை போட்டுக்கொண்டு தனியாக நள்ளிரவில் பாதுகாப்பாக நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கிறதோ, அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றுபொருள்’ என்று கூறினார்.

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும் பெண்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டவர். இவ்வளவு காலமாகியும், பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லாதநிலை மட்டுமல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதும் வேதனை அளிக்கிறது. சமீபகாலமாக சிறு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆங்காங்கு நடக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அக்கம்-பக்கத்தினர், வேலைசெய்பவர்கள், சொந்த உறவினர் என்று யாரையும் நம்பமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் மிக வேதனையோடு, ‘ஒருகாலத்தில் இந்தியா ஆன்மிக நாடு, தெய்வீக நாடு’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிறு குழந்தைகள்கூட கொடூரமிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது, ‘கற்பழிப்பு பூமி’ என்று அழைக்கக்கூடிய கட்டாய சூழ்நிலை வந்துவிட்டது என்று மிகவருத்தத்தோடு தன் கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்.

    நீதிமன்றத்தில் அவர் கருத்து வெளியிட்ட அதேநாளில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிறுகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடியவர்களுக்கு அதிக பட்சமாக தூக்குதண்டனை விதிக்கும் வகையிலான மசோதா நிறைவேறியிருக்கிறது. இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றபிறகு குற்றவியல் சட்டமாக (திருத்தம்) நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின்படி, 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை.



    அதிகபட்சமாக தூக்குதண்டனை அல்லது ஆயுள் முழுக்க தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பலபேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தால் ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு குறைவான சிறுமியை கற்பழித்தால் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள்முழுக்க தண்டனை விதிக்கப்படும்.

    16 வயதுக்கு மேற்பட்டவர்களை கற்பழித்தால் 10 ஆண்டு சிறைதண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை விதிக்கப்படும். இதில், பாராட்டத்தக்க அம்சம் என்னவென்றால், இதுபோன்ற வழக்குகளை 2 மாதத்திற்குள் புலன்விசாரணை செய்ய வேண்டும். கீழ்கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்டு, மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தால் 6 மாதத்திற்குள் பைசல் செய்யப்படவேண்டும் என்று இருக்கிறது.

    மரண தண்டனை விதிப்பதால் மட்டும் இந்த குற்றங்களை குறைத்துவிடமுடியாது. ஏற்கனவே மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குதண்டனை விதிக்கும் சட்டம் இருந்தாலும், அங்கு குற்றங்கள் குறையவில்லை. அரபு நாடுகளைத்தவிர உலகில் பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்த சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிப்பது பாலியல் வன்கொடுமை குற்றங்களை குறைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

    ஆனால் இந்த கொடூரவிதமான எண்ணம் ஏற்படாமல் இருக்க மனரீதியான பக்குவங்களை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற கொடூரர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்பதை பட்டும் படாமல், பள்ளிக்கூடங்களிலும், பெற்றோர்களும் கற்றுக்கொடுக்க வேண்டும். 
    தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #TamilnaduHighWays #MinisterJayakumar
    சென்னை:

    மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2012-2013-ம் ஆண்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்க செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி. எம்.சி.) என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுதுபார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், அவசரகால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்பு சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்;

    மேலும், சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லைக் கற்கள் அமைத்தல், விபத்துகளை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியீடுகளை அமைத்தல்,

    சாலை ஓரப்புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத்தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

    மழைக்காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன.

    எனவே மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டு இருப்பதுடன் பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அந்தச் செய்தியில், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 5 கோட்டத்துக்காக ரூ.500 கோடிக்கு பதிலாக ரூ.2,083 கோடி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நடை முறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிதி முறைகேடு என்பது தவறான தகவல் ஆகும்.

    அனைத்து பணிகளையும் உள்ளடக்கிய செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூறு மதிப்பீட்டை மட்டும் சுட்டிக் காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி கோட்டத்தில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி.எம்.சி.) மூலம் பணியை மேற்கொள்ளாமல் தனித்தனியாக திட்டப் பணிகள் மூலம் சாலைகளை மேம்படுத்தி இருந்தால் ரூ.278 கோடி நிதி தேவைப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பி.பி.எம்.சி. மூலம் ரூ.55.46 கோடியை அரசு சேமித்துள்ளது.

    அந்த வகையில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருது நகர் கோட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilnaduHighWays #MinisterJayakumar
    ×