களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

ஆறுமுகம் சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக கனகராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது.
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தெற்கு அப்பர்குளத்தை சேர்ந்த கனகராஜ் (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com