search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant"

    • சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
    • அனைத்து பஸ்களும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார் ஆகி யோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு கொடுத்த னர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

    எனவே அதனை உடனடியாக திறக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து பேருந்துகளும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சந்திப்பு பஸ் நிலையம்

    பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் ஏராள மான கடைகள் உள்ளது. இதனை நம்பி அவர்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்கள்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்காக கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வரு கிறார்கள்.

    எனவே இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடந்தாலும் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வந்தது.

    ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவை நிறுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே பஸ் நிலையத்தை திறக்கும் வரை அனைத்து பஸ்களும் அங்கு சென்று வர நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், தொகுதி செயலாளர் கருப்ப சாமி, துணைத் தலைவர் ஸ்டீபன், செய்தி தொடர்பா ளர் பகவதி, சந்திப்பு வியா பாரிகள் சங்க தலைவர் பெர்னா ண்டோ, செயலா ளர் ரவீந்திரன், பொருளா ளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நவாஸ்கான் பஸ் ஏறுவதற்காக புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
    • திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரி நவாஸ்கான் (30) என்பவர் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நவாஸ்கான் சட்டை பையில் இருந்து ரூ.500-ஐ திருட முயன்றார். சுதாரித்து கொண்ட வியாபாரி அவரை கையும் களவுமாக பிடித்து அங்கிருந்த போலீ சாரிடம் ஒப்படைத்தார்.

    இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் விசாரணை நடத்தினார். அதில் திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் (55), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். 

    • வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58) இவர் மளிகை கடைகளுக்கு மசாலா பொருட்கள் சப்பளை செய்யும் வேலை செய்து கொண்டிருந்தார். இவருக்கு மகாலட்சுமி (57) என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி கடைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். மகள் வேலைக்கு சென்று விட்டிருந்தார். ரவிச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மகாலட்சுமி கடைக்கு சென்று திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது ரவிச்சந்திரன் வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ரவிச்சந்தி ரனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவம னைக்கு கூட்டி சென்று பார்த்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோ வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் அம்மாபேட்டை சாமிநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக பபிதாவுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நடராஜன் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 50). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதி

    கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி பபிதா(45) இருந்து கவனித்து வந்தார்.

    இதனால் பபிதா வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கியிருந்தார். இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் பபிதாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    நகை-பணம் கொள்ளை

    உடனே வீட்டுக்கு புறப்பட்டு வந்த பபிதா அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் 12 கிராம் தங்க நகை, 815 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவையும் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

    • பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

    • நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 42). இவர் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 42). இவர் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு 2 பேரும் கார்களை தங்களது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தனர்.

    இன்று காலை 2 கார்களின் கண்ணாடிகளும் அடித்து, உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். நள்ளிரவில் மர்மநபர்கள் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    முன்விரோதம் காரணமாக கார் கண்ணா டிகள் உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • ஜெயபால் சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.
    • ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 41). மாட்டு வியாபாரி.

    மாயம்

    இவர் கடந்த 5-ந் தேதி நெல்லை மேலப்பாளையம் சந்தைக்கு வந்தார். சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.

    அங்கிருந்து அவரது மனைவி ராமக்கனி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் வீட்டிற்கு வர நேரமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு செல்லவில்லை.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேலப்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரேனும் கடத்திசென்றார்களா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜெயபாலின் செல்போன் எண் மூலமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கூடலூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடியேற்றப்பட்டது.
    • முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது

    ஊட்டி

    முதுமலைப் புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது.

    இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவை தொகுதி வணிகா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில் கடைகளில் கருப்புக் கொடியேற்றப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டி முடிவெடுக்கப்படும் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா். மசினகுடி பகுதியில் வாடகை வாகனங்கள் மற்றும் ஜீப்புகளிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தன

    • ராமர் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
    • ஆனந்தராஜ் ராமரின் மனைவியிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 42). இவர் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    தேவர்குளம் பஜார் பகுதியில் சென்றபோது அதே பகுதியில் தச்சு குடி தெருவில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பவர் இவரது வாகனத்தை வழிமறித்து ரூ.20 ஆயிரம் மாமூல் கொடுக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அதற்கு ராமர் கொடுக்க மறுக்கவே அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்தராஜ் ராமரின் மனைவியிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததும் அங்கிருந்து ஆனந்தராஜ் தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற ஆனந்தராஜ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 

    • பாளை வீரமாணிக்கபுரம் சீயோன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (வயது35). இவர் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைக்கும் ெதாழில் செய்து வருகிறார்.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிங்ஸ்லின் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனார்.

    நெல்லை:

    பாளை வீரமாணிக்கபுரம் சீயோன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (வயது35). இவர் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஸ்ரீவை–குண்டம் சிவராமமங்களம் வடக்கு தெருவை சேர்ந்த ரிசப்சங்கர் (24) என்பவர் கிங்ஸ்லினை அணுகி தான் நெல்லையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.2.70 லட்சத்திற்கு நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி உள்ளார்.

    மேலும் அந்த நகைகளை மீட்க தன்னிடம் 2 லட்சம் உள்ளதாகவும் மீதமுள்ள ரூ. 70 ஆயிரத்தை வழங்கினால் மீண்டும் அடகு வைத்து பணத்தை திருப்பி வந்துவிடுதாக கூறி உள்ளார்.

    அதனை நம்பிய கிங்ஸ்லின் அவரிடம் ரூ. 70 ஆயிரம் கொடுத்து அவருடன் சென்றுள்ளார்.

    அப்போது தனியார் வங்கிக்கு சென்ற ரிசப்சங்கர், தனது உறவினர் நகையை மீட்டு வந்து அவர் உங்களுக்கு நகையை தருவார் என்று கிங்ஸ்லினிடம் கூறிவிட்டு தான் அவசரமாக கடைக்கு சென்று வருகிறேன் என அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் நகையை அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிங்ஸ்லின் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனார்.

    அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்தி போலீசார் ரிசப்சங்கரை கைது செய்தனர்.

    • வியாபாரியிடம் பணப்பையை ஆட்டோ டிரைவர் பறித்துச்சென்றார்.
    • போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மேலூர், கருத்தபிள்ளையம் பட்டியைச் சேர்ந்த அயூப்கான் மகன் பிரேம்நசீர் (வயது 27). இவர் அந்த பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார்.இவர் வெளியூர் செல்வதற்காக பஸ் மூலம் நேற்று அதிகாலை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். முதல் பிளாட்பாரத்தில் உள்ள மொபைல் கடை அருகே பணப்பையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது பணப்பையை காணவில்லை. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் விசாரணை நடத்தினார்.

    அப்போது பிரேம் நசீரின் பணப்பையை, ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பணப்பையை பறித்து சென்றது செல்லூர், மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த ராமபாண்டி (37) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ராமபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    ×