search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் அடகு வியாபாரியிடம் நூதன முறையில்  ரூ. 70 ஆயிரம் மோசடி-வாலிபர் கைது
    X

    பாளையில் அடகு வியாபாரியிடம் நூதன முறையில் ரூ. 70 ஆயிரம் மோசடி-வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாளை வீரமாணிக்கபுரம் சீயோன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (வயது35). இவர் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைக்கும் ெதாழில் செய்து வருகிறார்.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிங்ஸ்லின் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனார்.

    நெல்லை:

    பாளை வீரமாணிக்கபுரம் சீயோன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (வயது35). இவர் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஸ்ரீவை–குண்டம் சிவராமமங்களம் வடக்கு தெருவை சேர்ந்த ரிசப்சங்கர் (24) என்பவர் கிங்ஸ்லினை அணுகி தான் நெல்லையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.2.70 லட்சத்திற்கு நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி உள்ளார்.

    மேலும் அந்த நகைகளை மீட்க தன்னிடம் 2 லட்சம் உள்ளதாகவும் மீதமுள்ள ரூ. 70 ஆயிரத்தை வழங்கினால் மீண்டும் அடகு வைத்து பணத்தை திருப்பி வந்துவிடுதாக கூறி உள்ளார்.

    அதனை நம்பிய கிங்ஸ்லின் அவரிடம் ரூ. 70 ஆயிரம் கொடுத்து அவருடன் சென்றுள்ளார்.

    அப்போது தனியார் வங்கிக்கு சென்ற ரிசப்சங்கர், தனது உறவினர் நகையை மீட்டு வந்து அவர் உங்களுக்கு நகையை தருவார் என்று கிங்ஸ்லினிடம் கூறிவிட்டு தான் அவசரமாக கடைக்கு சென்று வருகிறேன் என அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் நகையை அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிங்ஸ்லின் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனார்.

    அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்தி போலீசார் ரிசப்சங்கரை கைது செய்தனர்.

    Next Story
    ×