search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngman arrested"

    • ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அழகு பாண்டி தலை மையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அதில் சின்ன அய்யன்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜீவானந்தம் (37) தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரை மடக்கி பிடித்து தாடி க்கொம்பு போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து,அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • நண்பருடன் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர்.
    • இந்தநிலையில் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் கருப்பையா(23). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் தினேஷ். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் கருப்பையாவை தாக்க முற்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது தாயிடம் கருப்பையா கூறியுள்ளார். இந்தநிலையில் தினேஷ் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். தினேஷ் கருப்பையாவிடம் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் தினேசை கைது செய்தனர். காயமடைந்த கருப்பையா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
    • அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்ைத சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது42). சம்பவத்தன்று குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்று விட்டார். மீண்டும் வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அருகில் கோடாரி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.

    அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்த ஆகாஷ் (வயது17) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாளை வீரமாணிக்கபுரம் சீயோன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (வயது35). இவர் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைக்கும் ெதாழில் செய்து வருகிறார்.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிங்ஸ்லின் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனார்.

    நெல்லை:

    பாளை வீரமாணிக்கபுரம் சீயோன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின் (வயது35). இவர் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு அடகு வைக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஸ்ரீவை–குண்டம் சிவராமமங்களம் வடக்கு தெருவை சேர்ந்த ரிசப்சங்கர் (24) என்பவர் கிங்ஸ்லினை அணுகி தான் நெல்லையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.2.70 லட்சத்திற்கு நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி உள்ளார்.

    மேலும் அந்த நகைகளை மீட்க தன்னிடம் 2 லட்சம் உள்ளதாகவும் மீதமுள்ள ரூ. 70 ஆயிரத்தை வழங்கினால் மீண்டும் அடகு வைத்து பணத்தை திருப்பி வந்துவிடுதாக கூறி உள்ளார்.

    அதனை நம்பிய கிங்ஸ்லின் அவரிடம் ரூ. 70 ஆயிரம் கொடுத்து அவருடன் சென்றுள்ளார்.

    அப்போது தனியார் வங்கிக்கு சென்ற ரிசப்சங்கர், தனது உறவினர் நகையை மீட்டு வந்து அவர் உங்களுக்கு நகையை தருவார் என்று கிங்ஸ்லினிடம் கூறிவிட்டு தான் அவசரமாக கடைக்கு சென்று வருகிறேன் என அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் நகையை அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிங்ஸ்லின் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனார்.

    அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்தி போலீசார் ரிசப்சங்கரை கைது செய்தனர்.

    உல்லாச வாழ்க்கைக்காக பைக்குகளை திருடி விற்ற பள்ளி மாணவன் மற்றும் வாலிபரை கைது செய்த போலீசார் 19 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை சென்னலேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    ஜெய்சங்கர் தன்னுடைய பைக்கை கலவை காளிஅம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வையாபுரி என்பவரது வீட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வையாபுரி வீட்டு வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஜெய்சங்கர் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தார். அப்போது, பைக் திருடு போயிருந்தது.

    உடனடியாக கலவை போலீசில் புகார் அளித்தார். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். கலவை பஸ்நிலையத்தில் திருடு போன ஜெய்சங்கரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

    அங்கிருந்த பைக் திருடிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பள்ளிகொண்டா வேப்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் என்பது தெரியவந்தது.

    மற்றொருவர், பள்ளிகொண்டா ஒலகாச்சி தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி மகன் வைரம் என்கிற பிரபு (20) என்பது தெரியவந்தது.

    பிளஸ்-1 மாணவனின் பாட்டி வீடு கலவை அகரம் பகுதியில் உள்ளது. இங்கு, மாணவனும், அவருடைய நண்பர் பிரபுவும் அடிக்கடி சென்றனர்.

    அப்போது, ஆற்காடு மற்றும் கலவை பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம், வாழத்தோப்பு பகுதியில் பதுக்கியுள்ளனர்.

    திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தனர். மது குடிப்பது, பெண்களுடன் சுற்றுவது என பணத்தை அள்ளிவீசி செலவழித்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

    இதையடுத்து, ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மாணவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பிறகு வெட்டுவானம், வாழத்தோப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனையிட்டனர்.

    அங்கு 18 திருட்டு பைக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவன் உள்பட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×