என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பைக் மற்றும் கஞ்சா.
திண்டுக்கல் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
- ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அழகு பாண்டி தலை மையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில் சின்ன அய்யன்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜீவானந்தம் (37) தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரை மடக்கி பிடித்து தாடி க்கொம்பு போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து,அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story






