search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mayor"

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் ஆய்வு

    அப்போது தொன்மை யான புராதான சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பள்ளி அதன் பழமை மாறாமல் இருக்க, பள்ளி குழந்தைகள் சிரமமின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்கான ஏற்கனவே செய்யப்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாண வர்களுக்கு இனிப்பு கள், புதிய பாடப் புத்தகங் களை வழங்கினார். தொடர்ந்து குழந்தை தொழி லாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், கோடை விடுமுறை முடிந்து முதல்நாள் பள்ளிக்குச் வந்துள்ள மாணவர்களக்கு வாழ்த்துகள். படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள். உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும். நான் உறுதுணையாக இருப்பேன் என்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்திற் கேற்ப மாணவ- மாணவி கள் கல்வி கற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது மாநகராட்சி கவுன்சி லர்கள் மும்தாஜ், சுரேஷ் குமார், முன்னாள் கவுன்சில ரும், தி.மு.க.வட்ட செயலா ளருமான ரவிந்திரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், பகுதி செய லாளர் டூவிபுரம் ரவி, 38-வது வார்டு மொய்தீன் மற்றும் ஜேஸ்பர் ஞான மார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

    • குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தநிலையில் இன்று காலை அன்னூர் குறுக்கிலியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 4-வது குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தலைமை பொறியாளர் வெங்கடேஷ், செயற்பொறியாளர் கண்ணன் ,இளநிலைபொறியாளர் கோவிந்த பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 15.வேலம்பாளையம் நடுநிலை ப்பள்ளியில் வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவில் மற்றும் அட்சயா அறக்கட்டளை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, செல்வராஜ், அனுசுயாதேவி, சண்முகசுந்தரம், பிரேமலதா , கோட்டா பாலு, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காலை 6 மணி முதல் 9 மணி வரை குமரன் கல்லூரி அருகில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
    • திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாநகர் தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சியின் 2023-2024 வரவு செலவு கூட்டத்தில் அறிவித்தபடி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மங்களம் சாலை,எஸ்.ஆர்.நகர், குமரன் கல்லூரி அருகில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை பாதுகாக்கவும், பொது மக்கள் இளைப்பாறும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய சிறப்பான பொழுது போக்கு திருநாளாக மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

    இதில் தி.மு.க. மாநில,மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள்,தொ.மு.ச.நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 4-வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
    • 58,59,60-வது வார்டுகளில் மட்டும் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4-வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக 58,59,60-வது வார்டுகளில் மட்டும் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் மேல்நிலைத்தொட்டிகளில் 4-வது திட்ட குடிநீரை ஏற்றி வினியோகம் செய்வதற்கான ஆயத்தப்பணிகள் முடிந்துள்ளது. இந்தநிலையில் மேயர் தினேஷ்குமார் திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பம்ப்ஹவுஸ் மற்றும் கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். 4-வது குடிநீர் திட்டத்தை இந்த மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யும்போது 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்பது பாதியாக குறையும். இந்த தொட்டிகளில் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. பகுதி செயலாளர் குமார், கவுன்சிலர்கள் கோமதி, சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • நடப்பு ஆண்டு 604 மாணவ-மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக உள்ளனர்.
    • முகவரி மற்றும் செல்போன் எண் விவர பட்டியல் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    திருப்பூர் :

    சமீபகாலமாக தொழில் நிலை சீராக இல்லாததால் திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டுள்ளனர். இதுதவிர மாநகரில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு வீட்டை மாற்றிச்சென்றது உள்ளிட்ட காரணங்களால் நடப்பு ஆண்டு 604 மாணவ-மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக உள்ளனர். இவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் கல்வி தொடராமல் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசும்போது, மாநகராட்சி பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் 604 பேர் உள்ளனர். அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் விவர பட்டியல் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவை உள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக நடப்பு ஆண்டில் 75 வகுப்பறைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • 352 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பு விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
    • ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தெரு விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக 3 மற்றும் 4 வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4755 தெரு விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி., விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் அனைத்தும் நாளை தொடங்கப்பட உள்ளது.மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

    இதே போல் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகள்இ வணிக வளங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் இறுதிக்கு முன்பாக இந்த பணிகள் தொடங்கப்படும்.மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மாநகர் பகுதிகளில் பாதாள திட்டப்பணிகள் 89 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் நான்கு நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை திருப்பூர் மாநகராட்சி பெற்றுள்ளது தற்போது ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் பிரச்சனைக்கு தீர்வாக தண்ணீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.

    • உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில்வழி பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவில்வழி பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    கட்டுமான பணிகள் தொடங்கும்போது, பஸ்களை வேறு இடத்தில் இயங்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கோவில்வழி பஸ் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். 2 இடங்கள், தற்காலிகமாக பஸ்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வினோத், தி.மு.க. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • ரேஷன் கடைகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவுப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அரசு பள்ளி, அங்கன்வாடி, மற்றும் ரேஷன் கடைகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். செல்வநாயகபுரம் மற்றும் ஜின்பேக்டரி ரோடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கட்டிடங்களில் தரம் கழிப்பறை வசதிகள்குறித்து ஆசிரியர்களிடம் விவரம் கேட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்ற அவர் அங்கு உள்ள இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். உணவுப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    அப்போது மக்களுக்கு வழங்க தேவையான அளவில்ஆயில் இல்லாமல் குறைவாக இருந்ததால் அது குறித்து விவரம் கேட்டு கூடுதல் ஆயில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் வண்ணார்பேட்டையில் 2 இடங்களில் நிழற்குடை அமைக்க மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
    நெல்லை: 

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

    மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சி பொறியாளர் நாராயணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கந்தன் அளித்த மனுவில், மாநகர பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக வண்ணாரப்பேட்டை விளங்கிவருகிறது.

    இந்த இடத்தில் பிரபல ஜவுளிக்கடை முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிர்புறம் ஒரு பஸ் நிறுத்தம் இருந்தது. தற்போது சாலை விரிவாக்கத்தின் போது அதனை எடுத்து விட்டார்கள்.

     இதனால் பொதுமக்கள் வெயிலில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே இந்த 2 இடத்திலும் மாநகராட்சி சார்பில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    பாளை முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், பாளையம் கோட்டூர் வார்டு எண் 8, பஜனைமடம் பகுதியில் பாளையம் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் உள்புறமாக பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். 

    இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பை வண்டிகள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளதாக தகவல்கள் வருகிறது. 

    எனவே கூடுதலாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி ராமயன்பட்டி குப்பை கிடங்கிற்கு இந்த குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
    தூத்துக்குடியில் போக்குவரத்தை சீர்படுத்தவும், விபத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் போக்கு வரத்தை சீர்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பொது மக்களிடம் தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பொது போக்குவரத்தை சீர்படுத்த வும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், வி.இ.ரோடு, பாளைரோடு, (ராஜாஜி பூங்கா) ஜெயராஜ்ரோடு, அண்ணா நகர், சிதம்பரநகர் பிரதான சாலைகள், திருச்செந்தூர் ரோடு தெற்கு காவல் நிலையம் முதல், காமராஜ் கல்லூரி வரை நடைபாதைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க மாநகர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவினை தூத்துக்குடி மாநகரம் முழுவதும் நடைபாதையில் நிறுத்தப் படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தவறான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.

    மாநகர பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

    பொதுப் போக்குவரத்தை சீர்படுத்தவும், விபத்துக் களை தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.
    ×