search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்வழி பகுதியில் புதிய மேல்நிலைத்தொட்டிகளில் மேயர் ஆய்வு
    X

    மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    கோவில்வழி பகுதியில் புதிய மேல்நிலைத்தொட்டிகளில் மேயர் ஆய்வு

    • 4-வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
    • 58,59,60-வது வார்டுகளில் மட்டும் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4-வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக 58,59,60-வது வார்டுகளில் மட்டும் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் மேல்நிலைத்தொட்டிகளில் 4-வது திட்ட குடிநீரை ஏற்றி வினியோகம் செய்வதற்கான ஆயத்தப்பணிகள் முடிந்துள்ளது. இந்தநிலையில் மேயர் தினேஷ்குமார் திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பம்ப்ஹவுஸ் மற்றும் கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். 4-வது குடிநீர் திட்டத்தை இந்த மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யும்போது 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்பது பாதியாக குறையும். இந்த தொட்டிகளில் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. பகுதி செயலாளர் குமார், கவுன்சிலர்கள் கோமதி, சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×