search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநின்ற மாணவர்கள்"

    • நடப்பு ஆண்டு 604 மாணவ-மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக உள்ளனர்.
    • முகவரி மற்றும் செல்போன் எண் விவர பட்டியல் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    திருப்பூர் :

    சமீபகாலமாக தொழில் நிலை சீராக இல்லாததால் திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டுள்ளனர். இதுதவிர மாநகரில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு வீட்டை மாற்றிச்சென்றது உள்ளிட்ட காரணங்களால் நடப்பு ஆண்டு 604 மாணவ-மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக உள்ளனர். இவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் கல்வி தொடராமல் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசும்போது, மாநகராட்சி பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் 604 பேர் உள்ளனர். அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் விவர பட்டியல் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவை உள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக நடப்பு ஆண்டில் 75 வகுப்பறைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    ×