search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணையாளர்"

    • காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் பணியாற்றி வந்துள்ளார்.
    • எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    வெள்ளகோவில்.

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த ஆர்.மோகன் குமார் ஈரோடு மாவட்டம், பவானிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். அந்த பதவிக்கு காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்திற்கு இடம் மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வெள்ளகோவில் புதிய ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
    • ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 2-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

    மனுக்களை திரும்ப பெற 2-ந்தேதி கடைசி நாள். 3-ந்தேதி இரவு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 14-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவலை தேர்தல் ஆணையரும், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான முருகேசன், உதவி தேர்தல் ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில்வழி பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவில்வழி பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    கட்டுமான பணிகள் தொடங்கும்போது, பஸ்களை வேறு இடத்தில் இயங்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கோவில்வழி பஸ் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். 2 இடங்கள், தற்காலிகமாக பஸ்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வினோத், தி.மு.க. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
    • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரி வசூல் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.
    • 12 ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் முறையாக குடிநீர்க் கட்டணம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

     காங்கயம் :

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சியில் 2022-2023-ம் ஆண்டுக்கான சொத்துவரி, காலியிடவரி,தொழில் வரி ஆகிய அனைத்து இனங்களிலும் தமிழ்நாட்டில் முதல் நகராட்சியாக கடந்த ஜனவரி 31, 2023 அன்று 100 சதவீதம் வரி வசூல் செய்து காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது. இதன் மொத்த வரி வசூல் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.மேலும் காங்கயம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 12 ஆண்டுகளுக்குப்பின்னர், தற்போது முதல் முறையாக குடிநீர் கட்டணம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் தொகை ரூ.1 கோடியே 57 லட்சம் ஆகும்.

    இதற்கு உறுதுணையாக இருந்த நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், வருவாய் உதவியாளர்கள் எஸ்.சதீஷ்குமார், சு.பாண்டியன், கே.விஜயகுமார் ஆகியோருக்கும் வரி செலுத்தி உதவிய பொதுமக்களுக்கும் நன்றி தெரி–வித்–துக்–கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் இன்று முதல் வரி வசூலிப்பு மையங்களில் செலுத்தலாம் என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை மறுசீரமைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டது. அதனால் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட பயனீட்டு கட்டணம் உள்ளிட்டவை வரி வசூல் மையத்தில் செலுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் இன்று முதல் அனைத்து வரி மற்றும் கட்டணங்களை பணமாகவோ, காசோலை மூலமாகவோ செலுத்தலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    எளிய முறையில் வரி மற்றும் கட்டணங்களை https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக கட்டணமின்றி பயன்படுத்தலாம். 4 மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் சேவைகளான சொத்துவரி விதித்தல், காலியிட வரி விதித்தல், பெயர் மாறுதல்கள் செய்தல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்தால் உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    • பணியாளர்களுடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்று பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் நுண்ணுயிர் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகளை முறையாக பிரித்து வழங்க வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தெருக்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

    மேலும் இரவு நேர சாலையோர உணவகங்களில் சேரும் உணவு கழிவுகளை சாலைகள், மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்களில் கொட்டாமல் அவற்றை முறையாக அகற்ற வேண்டும். கடந்த வாரத்தில் மட்டும் சாலைகளில் குப்பைகளை கொட்டிய 2 தனியார் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே மதுரை மாநகரை தூய்மையான மாநகராக வைத்துக் கொள்ளுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேண்டுகோள் விடுத்தார்.

    ×