பல்லடம் நகராட்சியில் சொத்து வரியை விரைவாக செலுத்த ஆணையாளர் வேண்டுகோள்

ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com