search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt hospital"

    • உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
    • டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

    கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர்.
    • 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

    இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அதுவும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, "ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்" என தெரிவித்தார்.

    இதேபோன்று அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், " இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 16-ந் தேதி 20 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்" என்றார்.

    பிரச்சினைக்குரிய ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத்துறை குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந்துள்ள இறப்புகளுக்கான காரணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிரமப்படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:-

    வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற்காகத்தான் தலைமை மருத்துவ சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ சூப்பிரண்டுகளுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாத்திரைகள் வாங்குவதற்காக 3 கவுண்டர்கள் இயங்கி வருகிறது.
    • வயதானவர்கள் நீண்ட நேரம் நின்று மாத்திரை பெற சிரமம் அடைகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.அவர்களுக்கு மருத்து வர்கள் சார்பில் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் வாங்குவதற்காக 2 பொது கவுண்டர்கள், மாற்றுத்திறனாளி களுக்கென 1 கவுண்டர் என மொத்தம் 3 கவுண்டர்கள் இயங்கி வரும் நிலையில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக வயதானவர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று மாத்திரை பெறுவதற்கு பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். நேற்று வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் மாத்திரைகள் வாங்குவதற்கு நோயாளிகள் அதிகளவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அதில் வயதான மற்றும் சிறு குழந்தைகளுடன் வந்த பெண்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து இருந்தனர். எனவே நாளுக்கு நாள் நோயாளிகள் தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலையில் மாத்திரைகள் வழங்குவதற்கு கூடுதல் கவுண்டர்களை திறக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கூலித் தொழிலாளியான நம்பிராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து கொடுத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆலடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை மையத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டும் கருவி பழுதடை ந்துள்ளதால், உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    இதற்கு இறந்தவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இறந்தவரின் உடலுடன் அரசு மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக கொடுத்தனர். இதனை அடுத்து நம்பிராஜன் உடல் அந்த பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

    நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சதீஷ்குமார் தூக்குமாட்டி தற்கொலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.

    சதீஷ்குமார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார்.

    இதையடுத்து கணவன்- மனைவியும் சத்தியமங்கலம் கோம்பு பள்ளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லையே என சதீஷ்குமார் மன வேதனை அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது உறவினர்களிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி வெளியூர் சென்று விட்டார். இதனால் சதீஷ்குமார் மட்டும் சத்தியமங்கலத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இதையடுத்து நேற்று முன் தினம் சந்தியா சதீஷ்குமாருக்கு போன் செய்து பேசினார். இதையடுத்து நேற்று மீண்டும் சந்தியா, சதீஷ்குமாருக்கு போன் செய்தார்.

    ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து சந்தியா அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சதீஷ்குமாரை போய் பார்த்து வரும் படி கூறினார்.

    இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பேனில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கெலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.

    மேலும் தனது கையில் ஊசியில் குத்தியப்படியும், இதனால் ரத்தம் கீழே கொட்டிய நிலையிலும் இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சதீஷ்குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்.

    ஆனாலும் அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சதீஷ்குமாரின் உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது.
    • வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது

    கோத்தகிரி 

    கோத்தகிரியில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று அரசு மருத்துவமனை கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி, பெண்கள் மகப்பேறு பகுதி என பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு ரத்த வங்கி கட்டிடமும், பிணவறை கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டது. நாளுக்குநாள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளின் வருகையும், வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பழைய அவசர சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை போக்கும் விதமாக அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கட்டிட பணியானது மேலும் விரைவாக முடிக்க வேண்டி கடந்த சில வாரங்களாக இரவும், பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணி வேகமாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    • 500- க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
    • மருத்துவர்கள் கீதா, தீபிகா உள்ளிட்டோர் பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட சுகா தார நலபணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி எம்.பி.தனுஷ் குமார் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் முரளிசங்கர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி, இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் அஜீஸ் கலந்து கொண்டனர்.

    முகாமில் 500- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோ தனை செய்து கொண்டனர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொதுமக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து, புற்றுநோய் இல்லா தென்காசி மாவட்டத்தினை உருவாக்கு வதற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எப்போதும் தயாராகவும் அதற்க்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

    முகாமில் மருத்துவர்கள் கீதா, லதா, ஸ்வர்ணலதா, விஜயகுமார், கார்த்திக் அறிவுடை நம்பி, ஷெரின், நாகஜோதி, தீபிகா ஆகியோர் பொது மக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

    ரத்தமாதிரிகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் 10 நிமிடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சைக்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் முகாமில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி, முத்துலட்சுமி, வசந்தி மற்றும் செவிலியர்கள், மருந்தாளு னர்கள், பணியாளர்கள் அனை வரும் கலந்து கொண்டனர். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.

    • அரியானா அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது.
    • அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:

    அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

    பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வார இறுதிகள், மாலை மற்றும் இரவுப் பணிக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது. தவறும் ஊழியர்கள் குறிப்பிட்ட தினம் பணிக்கு வராததாக பதிவு செய்யப்படும்.

    வினோதமான முடி அலங்காரம், அதிகமான நகை, அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காலணிகளும் தூய்மையாக இருக்கவேண்டும். பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது. டெனிம், தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை.

    ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஒழுங்கு, ஒரே தன்மை, சமத்துவம் போன்றவற்றை கொண்டு வருவதற்காகவும், அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    பாதுகாவலர்கள், டிரைவர்கள், சமையலர்கள் உள்பட ஆஸ்பத்திரி அனைத்துப் பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அரியானா மாநில அரசின் இந்த முடிவை பெரும்பாலான அரசு டாக்டர்களும், ஊழியர்களும் வரவேற்றுள்ளனர்

    • கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனையின் பழைய அவசர சிகிச்சை பிரிவு போதிய வசதிகள் இல்லாததால் ஒரே சமயம் அதிக நோயாளிகள் வந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் விதமாக மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கியது. தற்போது அந்த கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்கான கட்டிட பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பரிசோதனை செய்து கர்ப்பப்பை வாயில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்
    • கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து பொது மக்களுக்கு பிரசவ பகுதி தலைமை மருத்துவர் புனிதவதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தென்காசி:

    இன்றைய காலகட்டத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் அதிகரித்து வருவதால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு பல்வேறு பரிசோதனை திட்ட ங்கள் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை கருவியை ( வீடியோ கால்போஸ் கோப்பி ) மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பரிசோதனை செய்து கர்ப்பப்பை வாயில் ஏற்படும் நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெற்று முழுவதுமாக குணமடையலாம். இந்த வாய்ப்பினை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்க ளிடம் கேட்டுக்கொள்கிறறேன் என்றார்.

    கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து பொது மக்களுக்கு பிரசவ பகுதி தலைமை மருத்துவர் புனிதவதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

    மேலும் இந்த பரிசோதனை வாரந்தோறும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்களிடம் பரிந்துரை பெற்று தலைமை மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். மாவட்ட த்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , நகராட்சி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர் லதா, பேறுகால பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி , செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, வசந்தி , மருந்தாளுனர் கோமதி, செவிலியர் வடகாசி, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

    • காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தினையும் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ,கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம், காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் ஊரணியில் அமைக்கப்பட்ட சிறு குளம் , படித்துறை மற்றும் தடுப்பு சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது சுகா தார துணை இயக்குநர் முரளிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
    • உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு.

    இப்பகுதியை சுற்றிலும் நேருநகர், நேருகண்டி, லாரன்ஸ், கோத்தகண்டி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

    சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்த எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவ மனைகள் இல்லாததால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை பெற தொலை துாரமுள்ள மஞ்சூர் அல்லது ஊட்டி போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது.

    இதனால் காலவிரயம், கூடுதல் செலவினம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்க ளின் மையப்பகுதியாக உள்ள எமரால்டில் மருத்து வமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் நடந்த விழாவில் காணொளி காட்சி மூலம் மருத்துவமனையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான வசதிகளுடன் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எமரால்டு சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    ×