search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Machine open"

    • 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பரிசோதனை செய்து கர்ப்பப்பை வாயில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்
    • கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து பொது மக்களுக்கு பிரசவ பகுதி தலைமை மருத்துவர் புனிதவதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தென்காசி:

    இன்றைய காலகட்டத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் அதிகரித்து வருவதால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு பல்வேறு பரிசோதனை திட்ட ங்கள் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை கருவியை ( வீடியோ கால்போஸ் கோப்பி ) மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பரிசோதனை செய்து கர்ப்பப்பை வாயில் ஏற்படும் நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெற்று முழுவதுமாக குணமடையலாம். இந்த வாய்ப்பினை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்க ளிடம் கேட்டுக்கொள்கிறறேன் என்றார்.

    கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து பொது மக்களுக்கு பிரசவ பகுதி தலைமை மருத்துவர் புனிதவதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

    மேலும் இந்த பரிசோதனை வாரந்தோறும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்களிடம் பரிந்துரை பெற்று தலைமை மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். மாவட்ட த்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , நகராட்சி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர் லதா, பேறுகால பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி , செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, வசந்தி , மருந்தாளுனர் கோமதி, செவிலியர் வடகாசி, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

    ×