search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி தீவிரம்"

    • சில இடங்களில் காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே 16-ந் தேதி வரை ரெயில்சேவை ரத்து

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    குறிப்பாக ஊட்டி மலை ரெயில் செல்லும் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மலை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து சேதம் அடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே வருகிற 16-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 7-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து கடந்த 8-ந் தேதி மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது.

    இந்தநிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குன்னூர் மலை ரெயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    இதனால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை வருகிற 16-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற தகவலை தொடர்ந்து ஊட்டி- குன்னூர் இடையேயும் 13-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • அந்தியூர் பகுதியில் வந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், காட்டுப்பாளையம், சிந்த கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேட் (மிதியடி) தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பெண்கள் தங்கள் வீடுகளில் இரவு. பகல் பாராமல் மேட் தயாரித்து ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் திங்கட்கிழமைகளில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.

    மேலும் மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் அந்தியூர் பகுதியில் வந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த மேட் தேவைகள் அதிகளவில் இருக்கும் என்பதால் திருப்பூரில் இருந்து வேஸ்டேஜ் துணிகளை டெம்போ மூலம் அந்தியூர் பகுதிகளுக்கு கொண்டு வந்து அவற்றை மேட் (கால் மிதியடியாக) பயன்படுத்த தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் அமைந்திருப்பதால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் இதனை தயாரித்து கொடுக்கின்றார்கள்.

    மேலும் சிறியரக மேட் 14 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றாவாறு விற்பனை செய்து வருகின்றார்கள்.

    • குவிந்து கிடக்கும் மணல் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல்போக்குவரத்து கழகம்படகுபோக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற் காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடலில் உல்லாச பயணம் செய்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீனசொகுசு படகுகளும் உள்ளன.

    இந்த5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்த ளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன. அ

    துமட்டுமின்றிநீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத்தொ டர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது. அதன் பயனாக 5 ஆண்டு களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் தூர்வாரும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்ததூர்வாரும் பணிரூ.5 லட்சம் செலவில் நடைபெற்றுவருகிறது. இதுவரை சுமார்50டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது

    • இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் உள்ள டங்கிய கோவில் ஆகும்.

    அதேபோல் இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி பரிகார ஸ்தலம், சுற்றுலா ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    தினசரி இந்த கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து காவிரியில் புனித நீராடி பரிகார பூஜை செய்து பின்னர் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு இந்து அறநிலைய த்துறை சார்பில் தினசரி அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான மண்டபத்தின் மேற்கூரைகள் சிமெண்ட் சீட்டினால் தற்போது உள்ளதை அப்பு றப்படுத்தி விட்டு புதிதாக ஓடுகள் மேய்ந்து மேற்கூ ரைகள் அமைக்க இந்து சமய அறநிலைத்துறை உத்த ரவு வழங்கியது. இதனைத் தொடர்ந்து 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும். 

    • ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மொடக்குறிச்சி:

    சோலாரில் புதிய பஸ் நிலையம் உதயமாவதை அடுத்து ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஈரோடு நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக செல்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறை ரோடு, திண்டல் அடுத்த வேப்பம்பாளையத்தில் தொடங்கி சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம், அவல்பூந்துறை ரோடு ஆனைக்கல்பாளையம், முத்தூர் ரோடு லக்காபுரம், கரூர் ரோடு வழியாக கொக்கராயன் பேட்டை மற்றும் திருச்செங்கோடு ரோட்டை இணைக்கும் புறவழிச்சாலை ரிங் ரோடு அமைக்கப்பட்டது.

    இதில் ஆனைக்கல்பாளை யத்தில் இருந்து திண்டல் செல்லும் ரோட்டில் ரிங்ரோட்டிற்காக நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பிரச்சனை நீடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இதனால் ரிங் ரோட்டில் இணைப்பு சாலை ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பணிகளை முடித்து இணை க்கப்படாத சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் இணைத்து போக்குவரத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ரிங் ரோடு வழியாக நகருக்குள் செல்லாமல் திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறது.

    அதே போல் தென் மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்கள் ஈரோடு நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாகவும் சென்று வருகிறது.

    மேலும் ஈரோடு மாவட்டம் - நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து வானங்கள் பெரும்பாலும் ரிங் ரோடு வழியாக சென்று வருகிறது.

    இந்நிலையில் ரிங் ரோடு அமைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சாலையை சீரமைக்கவும், மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி யும் நடைபெற்று வருவதால் பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது.

    அப்போது ரிங் ரோடு வழியாக அதிகளவில் போக்குவரத்து இருக்கும் என்பதாலும், கரூர் ரோட்டில் இருந்து முத்தூர் ரோட்டில் உள்ள லக்காபுரம் ரிங் ரோடு வரை உள்ள சாலை இரு வழிச்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனையடுத்து ரிங் ரோட்டில் சாலை விரி வாக்கம் செய்யும் பணி செய்ய முடிவு செய்து, அதன்படி நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.6 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இதற்காக கரூர் சாலை யிலிருந்து சாலையின் இரு புறமும் அகலப்படுத்து வதற்காக ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் அகலப்படுத்தி தற்போது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலையின் இரு புறமும் எதிரெதிரே வரும் வாக னங்கள் முந்தி செல்ல முடியாதபடி இருந்த சாலையை கணக்கில் எடுத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏற்கனவே லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்த ஆனைக்கல்பாளை யம் ரிங் ரோடு வரை 3 வழி சாலையாக உள்ளது. அதே போல் திண்டல் ரிங் ரோட்டில் இருந்து சென்னி மலை ரோடு வரை இருவழிச் சாலையாக உள்ளது.

    லக்காபுரம் ரிங் ரோடு பணிகள் 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறை வடைந்த பின்னர் லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்து திண்டல் ரிங்ரோடு வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
    • ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.

    பீளமேடு,

    கோவை அவிநாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.

    இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு ஆறு வழி சாலகயாக மாற்றப்பட்டது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை.

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. கடந்த 2020-ம்ஆண்டு முதல் இந்த பணியானது நடந்து வருகிறது.

    பாலபணிகள் முடிவு பெற்றால் விமான நிலையம் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மிக எளிதாக கோவை நகரை கடந்து செல்ல முடியும்.

    இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ் , விமான நிலைய சித்ரா சந்திப்பு ஆகிய 4 இடங்களில் இறங்கு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சில இடங்களில் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தாங்கு தூண்கள் அமைக்கும் பணி தாமதமானது.

    தற்போது அந்தப் பணிகளும் முடிக்கு விடப்பட்டு முழுவதும் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.

    அதேபோல லட்சுமி மில் சிக்னல் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கப்பட்டு முடிவு பெற்றது. இத்திட்டம் 2024 ல் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    4 வழி பாதையாக உயர் மட்ட பணிகள் நடைபெறுவதால் கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியமான பயனாக இந்த பாலம் அமையும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நெல் உள்பட பல்வேறு பயிர்களை நடவு செய்து வருகிறார்கள். இதை யொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடை செய்யும் பணி நடந்து வரு கிறது.

    இதே போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் முதல் போக நெல் சாகுபடிக்கு கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.

    பாசன பகுதிகளான பாண்டியன் பாளையம், வேலம்பாளையம், மணியம் பாளையம், அய்யம் பாளை யம், நல்லி கவுண்டனூர், பாப்பாங் காட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் பவானி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா ஏடிடி 38,39, கருப்பு கவுனி, இட்லி குண்டு, பொன்னி மற்றும் பல நெற்பயிர்கள் நடவு செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து நெல் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பாசன கூட்ட மைப்புச் செயலாளர் பா.மா.வெங்கடாஜலபதி, ஈஸ்வரமூர்த்தி, யூ/8பி யின் தலைவர் ஏகாம்பரம் மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் சங்க செயலாளர் மசக் கவுண்டர் ஆகியோர் கூறும்போது,

    பெரும்பா லான விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை, பனியன் கம்பெனி மற்றும் மில் வேலைகளுக்கு சென்று விட்டனர்.

    இதனால் நெல் அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. தற்போது எந்திரத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரை கொடுத்து நெல் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்கள்.

    • கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனையின் பழைய அவசர சிகிச்சை பிரிவு போதிய வசதிகள் இல்லாததால் ஒரே சமயம் அதிக நோயாளிகள் வந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் விதமாக மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கியது. தற்போது அந்த கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்கான கட்டிட பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடைவிழாக்களும் நடத்தப்படும்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் நீலகிரியின் இயற்கை அழகினை ரசிக்கவும் தினந்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். குறிப்பாக கோடை காலங்களான ஏப்ரல், மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடைவிழாக்களும் நடத்தப்படும்.

    தற்போது நீலகிரியில் 2-ம் சுற்றுலா சீசன் துவங்க இருப்பதாலும், தொடர்ந்து பண்டிகை விடுமுறைகள் வரவிருப்பதாலும் தோட்டக்கலத்துறை சார்பில் பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மதில் சுவர் மற்றும் நடைபாதை பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களின் நாற்றுகள் நடவும் பணியும் நடைபெற்று வருகிறது.

    • விழுப்புரம் அருகே மேல்பாதி கிராம கோவிலில் 60 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • பொய்கால் குதிரை, செண்டி மேளம், உறுமி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில், வருகிற 2-ந் தேதி, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோவில் திருவிழா நடைபெறுகிறது. விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில், பழமைவாய்ந்த ஸ்ரீதர்ம ராஜா ஸ்ரீதிரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அத்துடன் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாரம்பரியம் மிகுந்த தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, கடந்த 23-ந் தேதி துவங்கி, அரிசிகவுண்டன் பாளையம் நாகரத்தினம், பாரத சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தொடர்ந்து வரும் 1-ந் தேதி காலை அக்னி பூஜை, கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி, மாலை கும்ப பூஜை, காப்பு கட்டுதல் நடக்கிறது. மறுநாள் (2-ந் தேதி) காலை 6 மணிக்கு தர்மராஜா பட்டாபிஷேக பூஜையும், 7 மணிக்கு பட்டாபிஷேக மங்கள ஆரத்தி தச தானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதையொட்டி, கிராமத் தில் வீதியுலா நடைபெறும் முக்கிய வீதிகள் தோறும் பச்சைகீற்று (தென்னை ஓலை) பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அலங்கரிக் கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலம், கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்கால் குதிரை, செண்டி மேளம், உறுமி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல், விழா குழுவினர்கள் சீதாராமன், சுப்பிரமணியன், சக்திவேல், தனபால், ராமகிருஷ்ணன், இளையரசன், தயாநிதி கோவில் நிர்வாகத்தினர், தாளாளர் மகாதேவன் அம்மன் கருணாநிதி பிரஸ் குமரன் அரவிந்த் செராமிக்ஸ் சரவணன் கிராம இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×