search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensification of work"

    • சில இடங்களில் காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே 16-ந் தேதி வரை ரெயில்சேவை ரத்து

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    குறிப்பாக ஊட்டி மலை ரெயில் செல்லும் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மலை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து சேதம் அடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே வருகிற 16-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 7-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து கடந்த 8-ந் தேதி மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது.

    இந்தநிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குன்னூர் மலை ரெயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    இதனால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை வருகிற 16-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற தகவலை தொடர்ந்து ஊட்டி- குன்னூர் இடையேயும் 13-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×