search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "germany"

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான் அணியை ஜெர்மனி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Pakistan #Germany
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், ஜெர்மனி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 36வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்ட்காவ் அபாரமாக ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Pakistan #Germany
    அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் அவரது முதல்நாள் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. #Merkel #G20 #MerkelmissG20
    பெர்லின்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது  உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.

    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.



    நெதர்லாந்து நாட்டின்மீது நடு வானில் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காததால் விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாது என்று விமானி தீர்மானித்தார். இதைதொடர்ந்து, அங்கிருந்து ஜெர்மனி நாட்டுக்கு  திரும்பிய விமானம் ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறங்கியது.

    இதனால், ஜி-20 மாநாட்டின் முதல்நாள் கூட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது. நேற்றிரவு போன் நகரில் தங்கி ஓய்வெடுத்த அவர், வேறொரு பயணிகள் விமானம் மூலம் இன்று அர்ஜென்டினா சென்றடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    #Merkel #G20 #MerkelmissG20 
    ஜெர்மனியின் மேற்கு பகுதியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார். #Pilotkilled #smallplanescollision #Germanyplanescollision
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத வகையில் வான்வெளியில் ஒன்றோடொன்று நேருக்குநேராக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #Pilotkilled  #smallplanescollision  #Germanyplanescollision .
    ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு செய்ததை இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்ய நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge
    மும்பை:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே மும்பையின் பண்ட்ரா பகுதியில் இன்று நடைபெற்ற அக்கட்சி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்த நாட்டை சீரழித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள அமைப்புகளை அழித்து வந்ததைப்போல் இந்தியாவின் அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் எண்ணத்துக்கு காங்கிரஸ் இடமளிக்காது என்று கூறினார்.

    இந்திய அரசியலமைப்பு என்பது இரு குறிப்பிட்ட மதம், சாதி, சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றது. 

    இவர்களின் நான்காண்டு ஆட்சியில் சரியான பாதையில் 4 அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.

    தொடர்ந்து ஊடகங்களை நசுக்குவதால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேச்சுரிமையும், கருத்துரிமையும் அழிக்கப்பட்டது. நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சிக்கிறது. 

    ஜெர்மனியின் சர்வாதிகாரி அந்நாட்டுக்கு என்ன செய்தாரோ, அதை இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என மோடி நினைக்கிறார். தற்போது அரசியலமைப்பு சட்டம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தினார். #Hitler #Modi  #HitlerdidtoGermany #MallikarjunKharge
    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மங்கள் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
    பெர்லின்:

    சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது.

    இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.



    அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

    480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
    ஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #planecrash
    பெர்லின் :

    மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. 

    நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து  அருகே மக்கள் குழுமியிருந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது.

    இதில், விமானத்தில் பயணம் செய்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.  #planecrash
    மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நல்ல பலனை அளித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஜெர்மனி, இத்தாலி நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டுக்கு வருமாறு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அந்த அழைப்பை ஏற்று மம்தா பானர்ஜி இன்று காலை 9.45 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டு சென்றார். வழியில் துபாயில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் ஜெர்மனி சென்றடையும் அவர் அங்கிருந்து இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு செல்கிறார்.

    இருநாடுகளிலும் 12 நாள் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை திரட்டும் மம்தா, வரும் 28-ம் தேதி கொல்கத்தா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மம்தாவுடன் மேற்கு வங்காளம் மாநில அரசின் தலைமை செயலாளர் மலய் டேய், நிதிமந்திரி அமித் மித்ரா மற்றும் நிதித்துறை செயலாளர் திவேதி ஆகியோரும் சென்றுள்ளனர். #MamataGermanytrip ##MamataItalytrip
    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
    முனீச்:

    ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

    இந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.

    ஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி. 
    காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடுகிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் அவர் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். மேலும், ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசவுள்ளார்.

    அதைத்தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
     
    கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் ராகுல் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொரியா குடியரசிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது. #KORGER #FIFAWorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெருகிறது. ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, கொரியா குடியரசை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி களமிறங்கியது.

    போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. கொரியா அணியின் கோல்கீப்பர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங்வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை 
    கொடுத்தார். 

    அதன்பின் ஜெர்மனி அணி கோல்கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜெர்மனி அணி மேற்கொண்டு கோல் அடிக்காததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 



    இதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #KORGER
    ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். #ISSFJuniorWorldCup #SaurabhChaudhary

    பெர்லின்:

    ஜெர்மனியின் சுஹல் நகரில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இது இந்தியாவுக்கு எட்டாவது பதக்கங்கமாகும்.

    இந்தப்போட்டியில் சவுத்ரி மொத்தமாக 243.7 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக சீனாவின் வாங் ஜிஹாவின் 242.5 புள்ளிகளே உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் சவுத்ரி இந்த சாதனையை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 



    இதே பிரிவில் கொரியாவின் லிம் ஹோஜின் (239.6) வெள்ளிப்பதக்கமும், சினாவின் வாங் ஜிஹாவ் (218.7) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. #ISSFJuniorWorldCup #SaurabhChaudhary
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018 #GERSWE
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
     
    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 



    இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனி குருஸ் 95-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், போட்டியின் முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.

    உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    ×