search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angela merkel"

    ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    வாஷிங்டன்:

    உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும்  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

    வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே

    அவ்வகையில், இந்த ஆண்டு நிலவரப்படி உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அவரையடுத்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த இடத்தை தெரசா மே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளார்.

    இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் அவரது முதல்நாள் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. #Merkel #G20 #MerkelmissG20
    பெர்லின்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது  உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.

    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.



    நெதர்லாந்து நாட்டின்மீது நடு வானில் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காததால் விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாது என்று விமானி தீர்மானித்தார். இதைதொடர்ந்து, அங்கிருந்து ஜெர்மனி நாட்டுக்கு  திரும்பிய விமானம் ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறங்கியது.

    இதனால், ஜி-20 மாநாட்டின் முதல்நாள் கூட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது. நேற்றிரவு போன் நகரில் தங்கி ஓய்வெடுத்த அவர், வேறொரு பயணிகள் விமானம் மூலம் இன்று அர்ஜென்டினா சென்றடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    #Merkel #G20 #MerkelmissG20 
    ரஷியாவிடம் இருந்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்வது தொடர்பாக ஜெர்மனி பிரதமரை நேரடியாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் இன்று அவரை சந்தித்து பேசினார்.
    புருசெல்ஸ்:

    ரஷியாவில் இருந்து பைப்லைன் வழியாக சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் விவகாரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நேரடியாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ராணுவத்துக்காக அந்நாடு மிக அதிகமாக செலவு செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

    ஜெர்மனியின் எரிபொருள் தேவையில் ரஷியாவிடம் ஏஞ்சலா மெர்க்கல் சரணாகதி அடைந்து விட்டதாக டிரம்ப் குறிப்பிட்டது ஏஞ்சலா மெர்க்கலை ஆவேசம் அடைய வைத்தது.

    முன்னர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததுபோல் தற்போது ஜெர்மனி இல்லை. எங்கள் நாடு முழுமையான தனி இறையாண்மை பெற்ற நாடு என்பதை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என ஏஞ்சலா மெர்க்கல் பதிலடி தந்தார்.


    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டு தலைநகரான புருசெல்ஸ் நகரில் நடைபெறும் ‘நாட்டோ’ நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று  ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து இருநாடுகள் இடையிலான ராணுவம் மற்றும் வர்த்தக தொடர்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ஜெர்மனியுடனும் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடனும் மிக நல்ல உறவுமுறைகளை அமெரிக்கா பேணி வருவதாக குறிப்பிட்டார். டிரம்ப்புடன் வர்த்தகம் மற்றும் குடியுரிமை பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்ததாவும், ஜெர்மனியின் கூட்டாளியாக அமெரிக்கா எப்போதுமே இருந்து வந்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார். #TrumpMerkelmeet #NATOsummit
    ×